“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - மனம் திறக்கும் பிரதம விருந்தினர் (நேர்காணல்)

எங்கள் இசைக் கச்சேரிகள் தமிழிசை அரங்குகளாகவே எதிர் காலத்தில் இருக்க வேண்டும்



By:

Submitted: 2019-05-17 14:26:22

கேள்வி : இந்த நிகழ்வின் முக்கியத்துவம் பற்றிக் கூறுங்கள்?

பதில் : அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது அன்றைய நிகழ்வு. காலத்தின் தேவை அறிந்த மிகவும் காத்திரமான செயல் நிகழ்வாகவே இதனைக் கருதுகிறேன். ஏனெனில் இன்று வரை நாம் அனைவரும் தென்னிந்திய ஆலயங்கள் மீது இந்தியக் கவிராயர்களாலும் இசையாளர்களாலும் உருவாக்கப்பட்ட பாடல்களையே பாடியும் கற்பித்தும் வருகின்றோம். ஆனால் எமது மொழியில் எமது ஆலயங்களின் சிறப்புக்கள், தேச வளங்கள், கலை பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையும் உணர்வு பூர்வமாக உள்ளடக்கியதாக எமது கவிராயர்களால் படைக்கப்பட்ட பாடல்களை இசையழகோடு அரங்கேற்றியிருப்பதானது காலத்தின் தேவையறிந்த வரலாற்று நிகழ்வு ஆகும்.

கேள்வி : எட்டரை மணித்;தியாலங்கள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட அரங்கேற்ற நிகழ்வினை முழுமையாகக் கண்டு களித்தவர் என்ற வகையில் நிகழ்வு பற்றிய உங்கள் உள்ளத்தின் வெளிப்பாடு என்ன?

பதில் : ஒரு மணித்தியால இசைக் கச்சேரியைக் கூடத் தற்காலத்தில் எவரும் பொறுமையாகவும் முழுமையாகவும் இரசித்தல் என்பது அருகி வரும் இக்காலத்தில், இந்த நிகழ்வில் தொடக்கத்தில் இருந்து நூறாவது பாடல் இசைத்து நிறைவு பெறும் வரை பார்வையாளர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடும் ஆர்வத்தோடும் நிகழ்வினைப் பெறுகை செய்தமை மட்டுமன்றி அளிக்கையின் நேர்த்தியான ஒழுங்கமைப்பையும்; இரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியமையும் சிறப்பம்சமாகும்.

கேள்வி : துறைசார்ந்த ஒருவர் என்ற வகையில், இந்த நிகழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அம்சங்கள்; எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில் : இதனைப் பல விதமான கோணங்களில் நான் வரிசைப்படுத்த விரும்புகிறேன். முதன்மையானதாக, செம்மொழியாம் எமது தாய் மொழியின் தனித்துவத்தை எடுத்தியம்பும் வகையில் நூறு பாடல்களும் அமைந்திருந்தமை, இப்பாடல்களின் பொருட்செறிவானது எமது ஈழத்துக் கவிராயர்களின் பெருமைகளை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தி நின்றமை, கவிராயர்களின் கருத்து வெளிப்பாடுகளை உள்ளுணர்ந்து பொருத்தமான முறையில் இசையூட்டப்பட்டமை, ஓர் இசைக்கச்சேரிக்குரிய முறையில் பாடல்கள் அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டமை, பாடகர்கள், துணைக்கலைஞர்கள் போன்ற அனைவரும் அர்ப்பணிப்புடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் செயற்பட்டமை, நேர்த்தியான நிகழ்ச்சித் தொகுப்பும் பாடல் வரிகளும் கவிராயர்களின் நிழற் படங்களும் நவீன முறையில் திரையிடப்பட்டமை, பொருத்தமான ஒலி, ஒளி அமைப்புக்கள், அரங்க வடிவமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டமை, பார்வையாளர்கள் சிறப்;பாக உபசரிக்கப்பட்டமை போன்ற அனைத்து அம்சங்களும் ஒன்றிணைந்து நிகழ்வின் வெற்றிக்கு வழிவகுத்தன. நிகழ்வின் மகுடமாகத் தமிழ்த்தாயின் ஆறடி உயர சிலை அமைக்கப்பட்டமையும் அதன் அழகும் அனைவரையும் கட்டிப்போட்டது என்றால் மிகையாகாது.

கேள்வி : முழுமையான செந்நெறி இசையரங்கு ஒன்றினை ஈழத்தின் தமிழிசைப் பாடல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எதிர் காலத்தில் முன்னெடுக்க முடியுமா?

பதில் : நிச்சயமாக நாம் அனைவரும் அதைத் தான் முன்னெடுக்க வேண்டும். இன்றைய செந்நெறி அரங்கின் ஒழுங்கமைப்பில் தானவர்ணம், விநாயகர் கீர்த்தனை, சௌக்ககால உருப்படி, மத்திம கால உருப்படி, பிரதான உருப்படி போன்றவற்றுடன் எளிமையான பாடல்கள், காவடிச்சிந்து, தில்லானா, திருப்புகழ் என்பன இடம்பெறுகின்றன. இவ்வகை உருப்படிகள் அனைத்துமே அன்றைய ஈழத்தின் தமிழிசை அரங்கேற்று விழாவினை நிறைவாக அலங்கரித்ததுடன் எதிர் காலத்தில் சிறந்ததொரு தமிழிசைச் செந்நெறி அரங்கினை நிகழ்த்துவதற்குப் போதுமான பல உருப்படிகளை அந்நிகழ்வு அறிமுகப்படுத்தி நின்றது. எமது துறையினரை இந்நிகழ்வு ஆச்சரியப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

கேள்வி : கடந்த காலங்களில் ஈழத்தின் தமிழிசை பற்றிய சிந்தனைகளும் செயற்பாடுகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்படாமைக்கான காரணங்களைக் குறிப்பிட முடியுமா?

பதில் : சங்கப் புலவர் பூதந்தேவனாரில் இருந்து தற்காலம் வரை வாழ்ந்து வரும் ஈழத்துக் கவிராயர்களின் ஆயிரக்கணக்கான பாடல்கள் இதுவரையில் வெறும் ஏடுகளாகவே எம்மத்தியில் இருந்தமை பெரும் வேதனைக்குரிய விடயமாகும். பல தசாப்தங்களுக்கு முன்னரே இம்முயற்சியானது மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். மொழிப்புலமையுடனான பாடல் தெரிவுகள், அவற்றிற்குப் பொருத்தமான இராகத் தெரிவு, வரன்முறையான, அழகான செந்நெறி வழுவாத சுரப்படுத்தல், தெளிவான கற்பித்தல் என்பன முறையே முன்னெடுக்கப்பட்டிருப்பின் எமது ஈழத்துத் தமிழிசையானது எமது இசையரங்குகளை என்றோ ஆட்சி செய்து பொது மக்கள் மத்தியிலும் புகழ் பெற்றிருக்கும்.

கேள்வி : இத்தகு சிறப்புடைய ஈழத்தின் தமிழிசையை எவ்வாறு மேலும் வளர்த்தெடுக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

பதில் : எமது மூத்த, இளம் கலைஞர்கள் அனைவருக்குமே இந்தக் கடமை இருப்பதாகவே நான் உணர்கிறேன். அந்த வகையில் தமது இசையரங்குகளிலும் கற்பித்தலிலும் ஈழத்தின் தமிழிசைப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனப்பக்குவத்தை வரவளைத்துக் கொண்டால் நிச்சயம் எமது ஈழத்தின் தமிழிசை பெருவளர்ச்சியின் உச்சத்தை நிச்சயமாக எட்டும் என்பதில் ஐயமில்லை. எனது எதிர்கால இசைப்பணி என்பது ஈழத்தின் தமிழிசை பற்றியதாகவே இருக்கும் என்பதை இங்கு மகிழ்வுடன் கூறிக்கொள்கிறேன்.

கேள்வி : ஈழத்தின் தமிழிசையை அடுத்த சந்ததிக்குக் கையளிக்கும் வழிமுறையாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

பதில் : இதற்கான முதன்மையான களமாக நான் பாடசாலைகளையே கருதுகிறேன். பாடசாலை மாணவர்களுக்கான இசைப் பாடத்திட்டத்தில் ஈழத்தின் தமிழிசைப் பாடல்களையும் ஈழத்து இசையாளர்களின் வரலாறுகளையும் உள்ளடக்கி கற்றல் கற்பித்தலில் சிறந்த முறையில் முன்னெடுக்கும் முயற்சியில் துறைசார்ந்தவர்கள் அக்கறை செலுத்தி, தமிழ் மொழித்தினப் போட்டிகளிலும் தனியிசை, குழு இசை, நடன அளிக்கைகள் போன்றவற்றில் ஈழத்து ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் ஈழத்துத் தமிழிசை நிச்சமாக அடுத்த சந்ததியிடம் கையளிக்கப்படும்.

கேள்வி : எதிர் காலத்தில் உங்களது இசையரங்குகள் தமிழிசை அரங்குகளாக அமையுமா?

பதில் : எனது இசையரங்கு மட்டுமல்ல ஏனைய கலைஞர்களின் இசைக் கச்சேரிகளும் தனித் தமிழ் இசையரங்குகளாகவே அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த எண்ணத்தையும் உந்துதலையும் அன்றைய அரங்கேற்று விழா என் மனதில் பெரிள அளவில் ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி : நிறைவாக, இவ்விழாவின் முதன்மை விருந்தினர் என்ற அடிப்படையில் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் : வரலாற்றுச் சாதனையாக வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட இவ்வரங்கேற்ற நிகழ்வின் சிந்தனைக்கும் செயலுக்கும் உண்மையாக உழைத்த நண்பர் தவநாதன் றொபேட் அவர்களுக்கும் அவரது நெறிப்படுத்தலில் வளர்ந்து வரும் குரலிசை மாணவர்களுக்கும் நிகழ்வை அழகு செய்த இசைக் கலைஞர்களுக்கும் பக்கபலமாக நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூற நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

நேர்காணல் : அருசி இணையத்துக்காக சி.செந்தூரன், ஆசிரியர், பரி.யோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்


Updated:

Related Articles

Banner
Banner

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi. Lorem ipsum dolor sit amet,

Products

Contact