Thursday 28th of March 2024 08:31:59 AM GMT

LANGUAGE - TAMIL
நூடுல் பாக்ஸ்
ஆஹா.. பிரமாண்ட நூடுல்ஸ்!!

ஆஹா.. பிரமாண்ட நூடுல்ஸ்!!


மரூக்கா என்ற உணவு நிறுவனம் ஒன்று ‘யாகிசோபா நூடுல் பாக்ஸ்’ என்ற பெயரில் நூடுல்ஸ் உணவை பிரமாண்ட அளவில் தயாரித்திருக்கிறது.

ஜப்பானின் ஜசசாக்கி பகுதியில் முயற்சிக்கப்பட்ட இந்த சாதனை நிகழ்விற்காக 352 பவுண்ட் எடையில் பிரமாண்ட நூடுல்ஸை உருவாக்கி சமைத்திருக்கிறார்கள்.

ராட்சத நூடுல்ஸ் உணவாக தயாரிக்கப்பட்ட இந்த உணவை 579 பேர் ருசித்துள்ளனர். நூடுல்ஸ் உணவு இந்தளவிற்கு பிரமாண்டமாக தயாரிக்கப்படுவதும் உணவை 579 பேர் சுவைபார்ப்பதும் இதுவே முதல்முறை என்பதால் இந்த நிகழ்வை கின்னஸ் சாதனையாக அங்கீகரித்துள்ளனர். சாதனை என்பதை தாண்டி ஐசசாக்கி பகுதி மக்கள் இதை நூடுல்ஸ் திருவிழாவாகவே கொண்டாடியிருக்கிறார்கள்.

சீனாவை பூர்வீகமாக கொண்ட நூடுல்ஸ் உணவுகள் தற்போது அநேக நாடுகளின் பிடித்தமான உணவாக மாறிவிட்டன. இந்நிலையில்தான் ஜப்பானியர்கள் நூடுல்ஸ் உணவை கொண்டு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.


Category: வாழ்வு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE