Friday 19th of April 2024 01:43:34 AM GMT

LANGUAGE - TAMIL
சாஹே போஸ்டருக்கு  நெட்டிசன்கள் கிண்டல்!

சாஹே போஸ்டருக்கு நெட்டிசன்கள் கிண்டல்!


இன்று இணைய தளத்தின் வளர்ச்சி மிகவம் பிரமாண்டமாக உள்ளது. அதிலும் சினிமா ரசிகர்கள் இதில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர். எந்த புதுப்படம் வெளியானாலும் அதில் உள்ள காட்சிகள் பற்றி உடனுக்குட்ன் விமர்சனம் செய்து விடுகின்றனர். இந்த ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடித்துள்ளார்கள். அந்த மொழி படத்தில் இருந்து சுட்டு உள்ளார்கள் என்று.

இதனால் நெட்டிசன்களின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்க சொந்தமாக கற்பனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர் திரைப்படத்துறையினர். இல்லாவிடில் படத்தின் ரிசல்ட் "புட்டுக்கும்" என்ற நிலைதான். அந்த வகையில் பாகுபலி-2 படத்திற்கு பின்னர் பிரபாஸ் நடித்து வரும் படம் ஹாலிவுட் ரேஞ்சிற்கு உள்ளது என்று அவ்வபோது தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அது பிளேட்; ரன்னர் 2049 என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என்று உடனேயே கருத்துக்கள் பதிவிட்டனர் நெட்டிசன்கள். அந்தளவிற்கு இணையத்தின் பயன்பாடு செம வேகமாக உள்ளது. இதேபோல் சாஹே படத்தின் மற்றொரு போஸ்டர் திரையரங்கு ஒன்றில் வெளியிடப்பட்டு இருந்தது. இது அதிகாரப்பூர்வ போஸ்டரா என்று தெரியாத நிலையில் அதுவும் ஹாலிவுட் படமான ஆப்லிவியான் படத்தின் போஸ்டர் போல் உளளது என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என்பதால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில் நேற்று வெளியீட்டு தேதியுடன் சாஹே படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதையும் காப்பி என்று ஆதாரத்துடன் கூறியுள்ளனர் நெட்டிசன்கள். இந்த முறை வெளியான போஸ்டர் பிரபல டிவி. சீரிசான பிரேக்கிங் பேட் போஸ்டரின் காப்பி என்று அந்த படத்தின் போஸ்டரையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

ஹாலிவுட் படம் போல் இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் போஸ்டரையே ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பியடிக்கிறார்கள். அப்போ படம் என்று கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE