Friday 19th of April 2024 01:52:32 AM GMT

LANGUAGE - TAMIL
மாயாவதி
காற்று போன பலூன் ஆனார் மாயாவதி... பிரதமர் கனவு புஸ்.ஸ்.ஸ்..!

காற்று போன பலூன் ஆனார் மாயாவதி... பிரதமர் கனவு புஸ்.ஸ்.ஸ்..!


சுழன்று அடித்த மோடி சுனாமி அலையால் தனது பிரதமர் கனவு கானல் நீரானாதால் வெகு சோகத்தில் உள்ளார் மாயாவதி என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிரடி பேச்சும்இ அதற்கேற்ற அரசியல் செயல்பாடுகளும் கொண்டவர்தான் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. உத்தர பிரதேசம் மாநிலத்தை நான்கு முறை முதல்வராக ஆட்சி செய்தவர். இவரது ஆவேச பேச்சும், தடாலடி அரசியலும் மற்ற அரசியல் கட்சியினரால் அதிர்ந்து போய் பார்க்கக்கூடியவை.

கடந்த 1995ல்இ இவர் முதல்வராக பதவியேற்றார். அப்போது முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் என்ன கூறினார் தெரியுங்களா? 'ஜனநாயகத்தின் பேரதிசயம்' என்றார். அந்தளவிற்கு உ.பி.யில் அரசியல் செயல்பாடுகளை கொண்டவர். எத்தனை காலம்தான் ஆடுவார்... மக்கள் ஆப்பு வைத்து விட்டால் என்பதற்கு இவரும் சாட்சி. கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் இவரை புறந்தள்ளினர் மக்கள். இதனால் படுதோல்வியை சந்தித்தார் மாயாவதி.

மாநில அரசியல் கைவிட்டால் என்ன இருக்கவே இருக்கே தேசிய அரசியல் என்று தன் பார்வையை டில்லி பக்கம் திருப்பினார். தேசிய அரசியலிலும் அதிக கவனம் செலுத்தினார். இவரது அரசியல் அரங்கில் முதல் எதிரி பாஜ கட்சியாகதான் இருந்தது. அதனால்தான் தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தனது பரம எதிரி கட்சியான சமாஜ்வாதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு கட்சிகளும் கைகோர்த்து கொண்டன.

காங்கிரசும் வேண்டாம், பாஜவும் வேண்டாம். இவைகளின் தலைமை இல்லாத கட்சிகளின் தலைமையில் மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் பிரதமர் பதவியில் அமர்ந்து விடலாம்' என்பதுதான் மாயாவதியின் திட்டமாக இருந்தது. அவரது குறிக்கோள் பிரதமர் இருக்கையில் அமர்ந்து விட வேண்டும் என்பதுதான். ஆனால் இதை நேரடியாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரது நடவடிக்கைகள் பிரதமர் பதவியின் மீது அவருக்கு இருந்த ஆசையை அப்பட்டமாக வெளிப்படுத்தின.

இதற்கு சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ் பக்கவாத்தியம் வாசிக்காத குறைதான். ஒரு பெண் பிரதமராக நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்தார். அதேபோல் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒடிசத நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களும் மாயாவதிக்கு பச்சைக்கொடி காட்டினர். இதனால் மிகுந்த ஆசையுடன் இருந்தார்.

உ.பி.யின் 'சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைந்துள்ளதால் 50க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம்' என்று செம ஸ்ட்ராங்காக இருந்தார் மாயாவதி. ஆனால் சுனாமி போல் இந்த முறையும் சுழன்று அடித்த மோடி அலையால் சுருட்டி வீசப்பட்டு உள்ளார் மாயாவதி. இவரது பிரதமர் பதவி கனவு பாலைவனத்தில் காணப்படும் கானல் நீர் போல் ஆகிவிட்டது.

முன்பே மாநில அரசியல் கவிழ்த்துவிட்ட நிலையில் தற்போது தேசிய அரசியலும் டாட்டா காட்டியிருப்பதால் மாயாவதியின் அரசியல் வாழ்க்கை பெரும் பின்னடைவு மற்றும் கேள்விக்குறியில் சிக்கி தவிக்கிறது


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE