Thursday 28th of March 2024 01:53:20 PM GMT

LANGUAGE - TAMIL
லண்டன் ட்ரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

லண்டன் ட்ரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!


தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது இன அழிப்பு, சர்வதேச விசாரணை மூலம் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும், அவர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள், என்று வலியுறுத்தி லண்டன் மாநகரின் மத்தியிலுள்ள ட்ரபால்கர் சதுக்கத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற 10ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பிரித்தனியா தமிழர் பேரவையினரால் 18 மே 2019 அன்று லண்டனிலுள்ள ட்ரபால்கர் சதுக்கம் (Trafalgar Square) என்னும் இடத்தில் பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் நினைவு கூறல் நிகழ்வு இடம்பெற்றது.

எம் மக்கள் மீதான இனப்படுகொலைக்கான நீதியையும் எமக்கான ஒரு இறுதி தீர்வையும் சர்வதேசத்திடம் வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவு தினம், முக்கியமான தலைவர்களின் பிரசன்னத்துடனும் தமிழ் மக்களுக்கு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தும் செய்திகளுடனும் செறிவான கருப்பொருளுடனும் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதனை சர்வதேச சமூகத்துக்கு வெளிக்கொணரும் முகமாகவும் தமிழர்களுக்கான நீதியையும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையில் உள்ள காலதாமதத்தை வெளிக் கொண்டு வருவதற்காகவும் 'தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம்' என்னும் கருப்பொருளுடன் 10 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நினைவு கூறப்பட்டது. மௌன அஞ்சலி செலுத்தி சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் செய்தியும், தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான பல ஆவணப்படங்களை தயாரித்து எம் மீதானஇனப்படுகொலையினை வெளி உலகுக்கு கொண்டு வந்தவருமான ஊடகவியலாளர் கெலம் மெக்ரே அவர்களின் உரையும், நில அபகரிப்பு போன்ற விடயங்களை ஆவணப்படுத்தி உலகின் முன் வெளிப்படுத்தும் அமெரிக்காவிலுள்ள பிரபல்யம் வாய்ந்த ஓக்லாண்ட் நிறுவனத்தின் (Oakland institute) நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான அனுராதா மிட்டல் (Anuradha Mittal) அவர்களின் செய்தியும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினரும், கனடிய பாரம்பரியம் மற்றும் பன்முக கலாச்சார பிரதி அமைச்சரான கரி ஆனந்தசங்கரி அவர்களின் காணொளியும் காண்பிக்கப்பட்டது.

பிரித்தானிய பிரதான எதிர்க்கட்சியான தொழில் கட்சியின் நிழல் நிதி அமைச்சரான ஜோன் மெக்டோனல் (Rt Hon John Mcdonnell) மற்றும் 2009 ஆண்டு பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சராக இருந்து இலங்கையில் போரை நிறுத்துவதற்கு முயற்சி செய்த டேவிட் மிலிபாண்ட், சேர் எட் டேவி (Rt Hon Sir Ed Davey MP), தெரசா வில்லியர்ஸ் (Rt Hon Theresa Villiers MP) போன்றோர்களின் ஆதரவு செய்திகளும் இடம்பெற்று அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரைகளுடன் உணர்வுபூர்வமாக நினைவு கூறப்பட்டது.

இனப் படுகொலைகளின் ஆதாரபூர்வமான விடயங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியொன்றை இளையோர்கள் அங்கு பல்லின மக்களுக்கு விளக்கமளித்தனர். அங்கு வந்த பல வெளிநாட்டவர்கள் அதனைப் பார்வையிட்டது மட்டுமல்லாது விளக்கங்கள் கேட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டனவற்றை புகைப்படமாக எடுத்துச் சென்றனர்.

இன அழிப்பு தொடர்பான முக்கியமான விடயங்களை வெளிக் கொண்டு வரும் முகமாக பல்வேறு விடயங்களை தாங்கிய ஒளித் திரையுடனான வாகனப் பவனி “நிகழ்வு” நடைபெற்ற இடங்கள் உட்பட 8 மணித்தியாலத்திற்கு மேல் லண்டன் மாநகரைச் சுற்றி வலம் வந்தது குறிப்பிடத் தக்கது.

இன் நினைவு தினத்தில் மேலும் சிறப்பம்சமாக பிரித்தானியாவாழ் தமிழ் சிறார்கள் மற்றும் இளையோர்களினால் இனப் படுகொலை தொடர்பான விடயங்களை அங்கு பிரசன்னமாகவிருந்தோர் மத்தியில் வெளிக்கொணரும் முகமாக மேடை நாடகங்களும் நாட்டிய நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் இளையோர் செயற்ப்பாட்டாளரும் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால்வரை வந்து தனது சிறுபராயத்தில் தாங்கள் சந்தித்த அவலங்கள் மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் கொடூரத் தாக்குதல்கள் பற்றிய தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டது மட்டுமன்றி இதற்கான சரியான தீர்வை பெற பாதிக்கப்பட்ட நாம் எப்படியான வேலைத் திட்டங்கள் மூலம் எமக்கான விடுதலையை பெற முடியும் என்பதனை தெளிவு படுத்தினார். ஏனைய இளைய செயற்ப்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப் படுகொலையை சர்வதேசத்தின் முன் கொண்டு சென்று எம் மக்களுக்கு நீதியையும் நிரந்தர பாதுகாப்பினையும் பெற்றுக் கொடுப்போமென உறுதி எடுத்தனர்.

அங்கே சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அரசியல், மனித உரிமை, ஊடகவியல் பிரமுகர்கள் வெளிப்படையாக நீதிக்கும் தமிழ் மக்களின் உரிமைக்குமாக குரல் கொடுத்தமை எம் மக்களின் கதறலும் கண்ணீரும் அவர்கள் கொடுத்த அளப்பரிய தியாகங்களும் வீணாகி விடாது, என்றோ ஒரு நாள் அவர்களின் கனவுகளும் அபிலாசைகளும் கை கூடி வரும் எனும் நம்பிக்கைக்கு வலுவூட்டியுள்ளது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE