உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடருக்கு முன்பாக நடைபெறுகின்ற பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்விகண்டுள்ளமை கிரிக்கெட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 ஆவது உலகக்கிண்ணத் தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது.
அதன் பயிற்சிப் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பிரிஸ்டனில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 47.5 ஓவர்கள் நிறைவில் 262 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவரில் 7 விக்கெட்டினை இழந்து பாகிஸ்தான் நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் வெற்றி ரசிகர்கள் மத்தியில் அந்த அணி தொடர்பிலான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: