Thursday 28th of March 2024 02:17:40 PM GMT

LANGUAGE - TAMIL
தலைநகர் பறக்கின்றனர் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்!

தலைநகர் பறக்கின்றனர் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்!


மத்தியில் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்கள் டில்லி செல்கின்றனர். அந்த வகையில் முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் டில்லி செல்கின்றனர். அதனால் தமிழகத்தில் இடைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்பு எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் காலியாக இருந்து 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை கடந்த 19ம் தேதி எண்ணப்பட்டது. திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றது. தமிழக அரசியல் களத்தில் லோக்சபா தேர்தலை விட மிகவும் எதிர்பார்க்கப்பட்டது சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தல்தான். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக ஆட்சி கலைக்கப்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பிரசாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து வந்தார். லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியது. ஆனால் தமிழகத்தில் 2 இடங்களை மட்டுமே அதிமுக-பாஜ கூட்டணியால் பெற முடிந்தது.

திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை பெற்றது. இருப்பினும் திமுக தலைவரின் எதிர்பார்ப்பு பொய்த்து போனது. 22 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக அதிகபட்சம் 20 தொகுதிகளை அள்ளும் என்று நினைத்திருந்தார். ஆனால் அந்த எண்ணம் பொய்த்து போனது. அதிமுக சட்டசபை இடைத் தேர்தலில் 9 தொகுதிகளை கைப்பற்றியது. திமுக 13 தொகுதிகளை கைப்பற்றியது.

இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறி வந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. இந்நிலையில் மத்தியில் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் டெல்லி செல்கின்றனர்.

இந்நிலையில் . புதிதாக தேர்வான, எம்.எல்.ஏ.,க்கள், அடுத்த வாரம் பதவியேற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், :தேர்தலில் வெற்றி பெற்றதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தேர்தல் ஆணையத்திலிருந்து வந்த பின், எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரை சந்தித்து, விபரம் தெரிவிப்பர்.

அவர்கள் விரும்பும் நாளில், சபாநாயகர் அறையில், பதவியேற்று கொள்ளலாம். நல்ல நாள் பார்த்து பதவியேற்பர்; பெரும்பாலும் அடுத்த வாரம் பதவியேற்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE