Friday 19th of April 2024 12:15:44 AM GMT

LANGUAGE - TAMIL
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்
4வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

4வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்


நடிகர் விஜய் சேதுபதியுடன் 4வது முறையாக இணைந்து நடிக்க உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

கோலிவுட்டை பொறுத்தவரையில் ஆண்டுக்கு குறைந்தது 6 படங்கள் ரிலீஸ் ஆவது நடிகர் விஜய் சேதுபதிக்குதான். அந்த வகையில் தற்போதும் பல படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து விஜய் சேதுபதி. இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் இவருக்கு ஜோடியாக 4வது முறையாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

ரம்மி பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய 3 படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில தற்போது 4வது படமாக கஃபெ.ரணசிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படம் கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகிறதாம். இதில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்துக்கான படப்பிடிப்பும் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை விஜய் சேதுபதியுடன் நடிகை ஐஸ்வர்யா இணைந்து நடித்த 3 படங்களுமே கிராமத்து பின்னணியை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் கிராமத்து பின்னணியில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE