Thursday 18th of April 2024 04:11:01 PM GMT

LANGUAGE - TAMIL
கட்டிடத்தில் மோதிய ஹெலிகப்டரை செலுத்திய விமானி
அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது  மோதிய ஹெலிகப்டர்!

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது மோதிய ஹெலிகப்டர்!


அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டிடம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்திற்குள்ளானது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டன் பகுதியில் 51 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின் உச்சியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ளது. அந்த இறங்குதளத்தில் நேற்று ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

இதுபற்றி நடந்த முதற்கட்ட விசாரணையில் மோசமான வானிலை காரணமாக விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹெலிகாப்டர் மோதியவுடன் கட்டிடத்தில் தீப்பற்றியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி உயிரிழந்தார். ஆயினும் விபத்தில் கட்டிடத்தில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தில் பயங்கரவாத செயல் எதுவும் இல்லை என நியூயார்க் நகர ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ கூறியுள்ளார். இந்த விபத்து பற்றி அதிபர் டிரம்புக்கு விளக்கமளிக்கப்பட்டது இக்கிலையில். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE