Thursday 18th of April 2024 02:08:19 PM GMT

LANGUAGE - TAMIL
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை
முதன்முறையாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை நிறைவேற்றியுள்ள தீர்மானம்

முதன்முறையாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை நிறைவேற்றியுள்ள தீர்மானம்


உலகநாடுகளில் யுத்த சூழ்நிலையில் காணாமல் போனவர்கள் சம்மந்தமான விடயங்களை கையாளுவதற்கான தீர்மானம் ஒன்றை முதன்முறையாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை நிறைவேற்றியுள்ளது.

யுத்தத்தில் ஈடுபடுகின்ற அனைத்து தரப்பும் காணாமல் போகின்றவர்களை முறையாக தேடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் அவர்கள் தொடர்பான சரியான விபரங்களை வேறுபாடுகள் இன்றி கொண்டிருக்கவும் இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பாக பல தசாப்தகாலமாக விடைதெரியாதிருப்பதாகவும் இவ்வாறான நிலைமை குறித்து வினைத்திறனான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

மனிதர்கள் காணாமல்போவதை தடுப்பத்கான நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், குறிப்பாக சிறார்கள் காணாமல் போகின்ற நிலைமை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை மீனதான விவாதத்தில் கருத்துக்களை முன்வைத்த பேராளர்கள் இலங்கையில் காணாமல் போயுள்ள ஆயிரக் கணக்கானவர்க் தொடர்பாக சுட்டிக்காட்டினர்.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE