Friday 29th of March 2024 09:42:26 AM GMT

LANGUAGE - TAMIL
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் புதிய சாதனை படைப்பு!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் புதிய சாதனை படைப்பு!


நேற்று மான்செஸ்டர் நகரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி 11 ஆயிரம் ஓட்டங்களை எட்டி புதிய உலகசாதனை படைத்தார். இதன் வாயிலாக சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நேற்று பெரும் பரபரப்பு இருந்து வந்தது. காரணம் உலக கோப்பை லீக் போட்டிகளில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. மழையின் காரணமாக போட்டி தடைபடுமோ என்று ரசிகர்கள் அச்சத்தில் இருந்தனர்.

இருப்பினும்நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் புதிய உலக சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி எட்டினார். இப்போட்டியில் 57 ஓட்டங்களை கடந்த இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

இவர் இந்த சாதனையை 230 போட்டிகளில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இந்த சாதனை இந்திய கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரல் (284 போட்டி) வசம் இருந்தது. மேலும் இரண்டாவதுஇ மூன்றாவது இடங்களில் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (295) இந்தியாவின் கங்குலி (298) ஆகியோர் இருந்தனர். இந்த சாதனைகளை முறியடித்து 230 போட்டிகளிலேயே விராட் கோஹ்லி 11 ஆயிரம் ஓட்டங்களை எடுத்து மாபெரும் புதிய சாதனையை செய்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் வெகு உற்சாகத்தில் உள்ளனர். இந்த போட்டியிலும் பாகிஸ்தானை இந்திய அணி 89 ஓட்ட வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மழையின் குறுக்கீடு காரணமாக டக்வொர்த் முறையில் கடைபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE