Wednesday 24th of April 2024 08:22:51 PM GMT

LANGUAGE - TAMIL
இரண்டாவது உலகப்போர் வெடிகுண்டு செயலிழப்பு
2ம் உலக போரில் பெர்லின் நகர் மீது வீசப்பட்ட ராட்சத வெடிகுண்டு!

2ம் உலக போரில் பெர்லின் நகர் மீது வீசப்பட்ட ராட்சத வெடிகுண்டு!


இரண்டாவது உலகப்போர் 1939-1945 ஆண்டுகளில் நடைபெற்றது. அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகர் மீது அமெரிக்கா 100 கிலோ கொண்ட ராட்சத வெடிக்குண்டை வீசியது. ஆனால் இந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை.

இந்த வெடிக்காத ராட்சத வெடிகுண்டு அலெக்சாண்டர்பிளாட்ஸ் சதுக்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த குண்டை செயலிழக்க செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த ராட்சத வெடிகுண்டை செயலிழக்க செய்யும் முயற்சிகளில் ஜெர்மன் போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ராட்சத வெடிகுண்டு செயல் இழக்க செய்வதற்கு முன்பு அப்பகுதியில் வசித்து வந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் வெளியேற்றினர்.

மேலும் அப்பகுதியில் முழுமையாக போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது.

பின்னர் வெடிகுண்டை நிபுணர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயலிழக்க வைத்தனர்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE