Friday 29th of March 2024 08:36:06 AM GMT

LANGUAGE - TAMIL
'நேர்கொண்ட பார்வை'
முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறதா நேர்கொண்ட பார்வை படம்?

முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறதா நேர்கொண்ட பார்வை படம்?


முன்கூட்டியே அஜித் படம் வெளியாகலாம் என்ற தகவல் கோலிவுட்டில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

விஸ்வாசம் படத்தின் பெரிய ஹிட்டை அடுத்து நடிகர் அஜித் நடித்து வரும் படம் நேர் கொண்ட பார்வை. இந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகி பெரிய வெற்றியை பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்திற்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.

இந்த படத்தை சதுரங்க வேட்டை படத்தின் இயக்குனர் எச். வினோத் இயக்கி உள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் விரைவாக முடிந்துள்ளதால் ஆகஸ்ட் 1ம் திகதியே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்கிறார்கள். இந்த தகவல் அஜித் ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தி உள்ளது.


Category: சினிமா, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE