Wednesday 24th of April 2024 06:15:33 AM GMT

LANGUAGE - TAMIL
வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வழிபாட்டுடன் தொடர்புட்ட நிலத்தில் புத்தவிகாரை!

வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலய வழிபாட்டுடன் தொடர்புட்ட நிலத்தில் புத்தவிகாரை!


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற சப்த கன்னிமார் ஆலய வளாகத்தை அபகரித்த இலங்கை இராணுவப் படையினர் குறித்த பகுதியில் பாரிய பௌத்த விகாரை ஒன்றை நிர்மாணித்து இருப்பதால் ஆலயத்தின் கிரிகைகளை செய்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக கவலைவெளியிடப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம் வருகை தந்ததில் இருந்து இன்று வரை இந்த விடயம் தொடர்பாக பல தரப்பினரிடமும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் ஆலய கிரிகைகளை செய்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற சப்த கன்னிமார் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க பன்னெடுங்கால பழமை வாய்ந்த ஆலயமாக காணப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஆலயத்தினுடைய பாரம்பரிய முறைப்படியான கிரிகைகளை செய்கின்ற ஆலய வளாகமானது யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தால் அபகரித்து குறித்த காணியில் பாரிய விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

ஒரு பௌத்த மதத்தவர் கூட இல்லாத பழம்பெரும் ஆலய கிரிகைகள் இடம்பெறும் ஆலய வளாகத்தை இராணுவம் அபகரித்து பௌத்த விகாரை அமைத்துள்ளமையானது பல்வேறு நெருக்கடிகளையும் ஏற்பட்டுத்தியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஆலய தரப்பு மற்றும் கிராம மட்ட அமைப்புக்களால் பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே இந்த விடயமாக உடனடியாக சம்மந்தப்படட தரப்புக்கள் தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு பெற்றுத்தரப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டடுள்ளது


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE