Thursday 28th of March 2024 08:48:28 AM GMT

LANGUAGE - TAMIL
பாடகர் சித்ஸ்ரீராம் இசையமைப்பாளர் ஆனார்

பாடகர் சித்ஸ்ரீராம் இசையமைப்பாளர் ஆனார்


பாடகராக அறிமுகமாகி தற்போது இசையமைப்பாளராக மாறியுள்ளார் சித் ஸ்ரீராம்.

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் 'வானம் கொட்டட்டும்'. இதில் இதில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளா மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் கதை வசனத்தை 'படை வீரன்' படத்தின் இயக்குநர் தானா மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த படத்திற்கு ‘96’ பட புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அவர் ரொம்ப பிஸியா இருப்பதால் படத்தின் பணிகள் தாமதம் ஆகக்கூடாது என்பதற்காக பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக புக் செய்யப்பட்டுள்ளார்.

இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சித் ஸ்ரீராம் அனிருத், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர்ராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.

தற்போது தன்னை பாடகராக அறிமுகப்படுத்திய இயக்குனர் தயாரிக்கும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


Category: சினிமா, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE