Friday 29th of March 2024 06:49:31 AM GMT

LANGUAGE - TAMIL
கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெறும் கண்ணே கலைமானே

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெறும் "கண்ணே கலைமானே"


இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

'கண்ணே கலைமானே' படம் இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தன. இந்நிலையில் இப்படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெறுகிறது என பதிவிட்டுள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE