Thursday 28th of March 2024 05:47:40 PM GMT

LANGUAGE - TAMIL
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பில் மன்னார் உறவுகள் கேள்வி!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பில் மன்னார் உறவுகள் கேள்வி!


உள்நாட்டு பொறிமுறையிலோ, அல்லது உள்நாட்டின் கூட்டுப் பொறிமுறையிலோ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டேரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து இன்று வியாழக்கிழமை (11) காலை மன்னாரில் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளருக்கு எழுதப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

-குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டேரின் உறவுகளாகிய நாம் கடந்த காலங்களில் நடைபெற்ற இறுதி யுத்த போரினால் எமது உறவுகளை தொலைத்த நிலையில் பல தடவைகள் எமது உறவுகளுக்காக பல்வேறுவிதமான துன்பங்களை, துயரங்களை, இழப்புக்களையும், ஏமாற்றங்களையும், அனுபவித்துள்ளோம்.

இவற்றை ஐக்கிய நாடுகள் சபையும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் நன்றாக அறிந்துள்ளது.

நாட்டின் அரச தலைவர்கள் எமது ஏமாற்று துயரங்களை கருணையோடு புரிந்துகொண்டு எமக்கு ஆவன செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தோம்.

ஆனால் பல ஆணைக்குழுக்கள், பல விசாரணை குழுக்கள் என்றபெயரில் கால இழுத்தடிப்பிற்குள் உள்ளாகி இருந்தபோதிலும் எமது உறவுகள் எம்மிடம் வந்துசேர்வார்கள் என்ற நம்பிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை எமக்கு எவ்வித பாராபட்சமும் இன்றி எம் உறவுகளை மீட்டுத்தரக்கோரி இந்த விண்ணப்பத்தை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

நீண்டகாலபோராட்டத்தின் தொடராக இது அமைகின்றது.

ஓர் உள்நாட்டு பொறிமுறையிலோ, அல்லது உள்நாட்டின் கூட்டுப்பொறிமுறையிலோ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை என்பதை தங்களுக்கு பொறுப்போடு தெரிவிப்பதற்காகவே இவ்வறிக்கையைச் சமர்ப்பிக்கின்றோம்.

சர்வதேச பிரதிநிதிகளை உள்ளடக்கி நீதி, நேர்மை பொருந்திய ஒரு பொறிமுறையின் மூலமே இதற்கான ஒரு தீர்வை எம்மால் எட்டமுடியும் என்பது எம் உறுதியான நிலைப்பாடாகும்.

மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டங்கள் தற்போது வடக்கிலும் கிழக்கிலும் இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிலையில் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், நாட்டின் தமிழ் அரசியல்;வாதிகள் உட்பட அனைத்து ஐ.நா அமைப்புகளும் பாராமுகமாக காலம் கடத்திக்கொண்டு போவதை, உறவுகளை இழந்த பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாகிய நாங்கள் ஏற்கமுடியாது என்பதை வலியுறுத்துவதுடன் இவ்விடயம் தொடர்பான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நாட்டின் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் வேதனை அளிக்கும் விடயமாக இது மாறியுள்ளது.

மேலும், காணாமல் போனோருக்கான அலுவலகம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதில் எமக்கு பல கேள்விகள் உள்ளன. கடந்த கால ஆணைக்குழுக்கள் போன்று தான் செயற்படுவார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

எமது காத்திரமான கோரிக்கை யாதெனின் பல ஆண்டுகாலமாக தமிழ் மக்களாகிய எமக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் நல்லாட்சி அரசு முடிவதற்கு முன்னர் தீர்க்கப்படாதவிடத்து எமது போராட்டமானது தமிழ் மக்களிடையே எழுச்சி பெற்ற போராட்டமாக மாறும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு அறியத்தருகிறோம்.

சிறிலங்காவின் உள்ளக விசாரணை ஊடாக அல்லது இணைந்த பொறிமுறை ஊடாக இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கும், போர் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியையோ, தீர்வையோ பெற்றுத்தர முடியாதுபோயுள்ளது, ஆகவே சர்வதேச தரத்திலான விசாரணையே எங்களுக்கு வேண்டும் என நாங்கள் அனைவரும் வலியுறுத்துகின்றோம்.

தமிழ் மக்களாகிய எங்களுக்கு இழந்த எமது உறவுகள் தொடர்பான உண்மையை தெரிந்து கொள்ள ஐக்கிய நாடுகள் சபை என்ற ரீதியில் ஒரு நீதியை பெற்றுத் தர உரிய தரப்பிற்கு கொண்டு சேர்ப்பீர்கள்; என உறுதியாக நம்புகிறோம்.

'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி' என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். நீதி மன்றத்தின் மனச்சாட்சிகளாக மாறி உரிமைப்போராட்டத்தில் பங்கேற்போம்.என குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE