Friday 29th of March 2024 09:57:36 AM GMT

LANGUAGE - TAMIL
இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால்  புலமைப் பரிசில்கள் வழங்கி வைப்பு

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் புலமைப் பரிசில்கள் வழங்கி வைப்பு


ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகின்ற இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் செயல்படுத்தப்பட்டு வருகின்ற பிள்ளைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கடந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

குறித்த சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒரு வயது முதல் 18 வயது வரையான பிள்ளைகள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர் அந்த வகையில் இந்த சமூக பாதுகாப்புத் திட்டத்தில் பிள்ளைகளை இணைக்கின்ற செயல்திட்டத்தை கிராம உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சமூகசேவைகள் உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட செயலக சமூக பாதுகாப்பு சபை உத்தியகத்தர்கள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்

கடந்த ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பிள்ளைகளில் கடந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களாக தெரிவு செய்யப்பட்ட 11 மாணவர்களுக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து இந்த புலமைப் பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டது இதனூடாக அவர்களுடைய சேமிப்பு தொகைக்கு ஏற்ற வகையில் 5000 ரூபா முதல் 50000 ரூபா வரையான பணப்பரிசுகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது

சமூக பாதுகாப்பு சபையினுடைய மாவட்ட இணைப்பதிகாரி க சஞ்சீவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம பிரதீபன் புதுக்குடியிருப்பு பிரதேச உதவி பிரதேச செயலாளர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கணக்காளர் சமூகசேவைகள் உத்தியோகத்தர் அரச அதிகாரிகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பணத்தை பெற்றுக் கொண்ட மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

இதன்போது இந்த மாணவர்களை குறித்த திடடத்தில் இணைத்த அதிகாரிகளும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்


Category: உள்ளூர, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE