Friday 29th of March 2024 06:06:24 AM GMT

LANGUAGE - TAMIL
ஆடை படத்தில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

"ஆடை" படத்தில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி


நடிகை அமலாபால் நடித்து மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் ஆடை. இயக்குனர் ரத்னகுமார் இயக்கி உள்ள இந்த படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகிறது. இதில் அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி உள்ளதாம்.

ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக் ஆரம்பித்து டீசர், டிரைலர் என்று அனைத்தும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர். அடுத்த வாரம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகளவில் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பி.சுசிலா அவர்கள் பாடிய பக்தி பாடல் ஒன்று உள்ளதாம். இந்த பாடல்தான் இன்ப அதிர்ச்சியாம். இந்த பாடல் தான் சுசிலா முதன் முறையாக பாடிய பாடலாம், அதுவும் 70 வருடத்திற்கு முன்பு. எப்படி இது மிகவும் இன்ப அதிர்ச்சிதானே. கண்டிப்பாக இந்த பாடல் செம்ம சர்ப்ரைஸாக இருக்கும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: சினிமா, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE