Friday 29th of March 2024 01:08:09 AM GMT

LANGUAGE - TAMIL
சட்டவிரோத மணல்அகழ்வில்ஈடுபட்ட உழவுஇயந்திரம் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோத மணல்அகழ்வில்ஈடுபட்ட உழவுஇயந்திரம் கைப்பற்றப்பட்டது


கிளிநொச்சி ஊரியான் பகுதியில் சட்டவிரோத மணல்அகழ்வில்ஈடுபட்ட உழவுஇயந்திரம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஊரியான் கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோதமணல்அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் மற்றும் கிராம மட்ட பொதுஅமைப்புக்களாலும் பொதுமக்களாலும் பொலிசாருக்கு பலதடவை தகவல்களை வழங்கியபோதுபொலிசார் சட்டவிரோத மணல்அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யாத நிலையே தொடர்ந்து காணப்பட்டது.

இந்நிலையில் இன்று (11-07-2019) பகல் பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன், ஊரியான் கிராமஅலுவலர் நந்தகுமார், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊரியான் கனகராயன் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு நேரடியாகச்சென்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு உழவு இயந்திரத்தினையும ,அதன் சாரதியினையும் கைது செய்து விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேநேரம் இப்பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு உழவு இயந்திரங்கள் தப்பிச்சென்றுள்ளன. இதேவேளை டிப்பர் வாகனங்களில் ஏற்றிச்செல்வதற்காக சட்டவிரோதமான முறையில்அகழ்வு செய்யப்பட்டு குவிக்கப்பட்டு ஐம்பதிற்கும் மேற்பட்ட கியுப்மணலையும் விசேட அதிரடிப்படையிரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வில் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் மற்றும் அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்தியும் நான்கு மணித்தியாலயங்களுக்கு மேலாகியும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தராத நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதிவாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, உடடியான விசேட அதிரடிப்பைடயினருக்கு தகவல் வழங்கிய நிலையில் 20 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடிப்படையினர் உழவு இயந்திரத்தையும் அதன் சாரதியையும் கைது செய்ததுடன், தப்பிச்சென்ற உழவு இயந்திரங்களின் விபரங்களையும் சம்பவ இடத்தில் கடமையிலிருந்த கிராம அலுவலர்களிடம் பெற்றுச்சென்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE