Friday 19th of April 2024 02:45:35 AM GMT

LANGUAGE - TAMIL
பாராளுமன்ற தெரிவுக்குழு அமர்வுகள் ஒத்திவைப்பு

பாராளுமன்ற தெரிவுக்குழு அமர்வுகள் ஒத்திவைப்பு


பாரா­ளு­மன்ற வளா­கத்தில் இன்று கூட­வி­ருந்த பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமர்­வுகள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் மீண்டும் 24 ஆம் திகதி புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.

இன்றைய தினம் அரச புலனாய்வுத் துறை , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் , பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இன்று சாட்சியமளிக்கவிருந்தனர்.

இந்நிலையில் இன்­றைய தெரி­வுக்­கு­ழு­விற்கு அழைக்­கப்­பட்­டி­ருந்த விசா­ர­ணை­யா­ளர்கள் சிலர் வெளி­நாட்டு விஜ­யத்தில் இருப்­ப­தாலும் சிலர் விசா­ரணை அமர்­வு­க­ளுக்கு வர முடி­யாத வேறு கார­ணங்­களை கூரி­யுள்­ள­த­னாலும் இன்­றைய தெரி­வுக்­குழு அமர்­வு­களை நிறுத்த குழு தீர்­மானம் எடுத்­துள்­ளது.

அடுத்த மாதம் இறு­திக்குள் பிர­தமர் உள்­ளிட்ட முக்­கிய நபர்­களை அழைத்து விசா­ரணை நடத்தி அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­வுக்­குழு தலைவர் பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தெரி­வித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE