Thursday 28th of March 2024 05:36:53 AM GMT

LANGUAGE - TAMIL
நானாட்டான் பிரதேச சபைக்கான வெள்ளிப்பதக்கம் வைபவ ரீதியாக கையளிப்பு

நானாட்டான் பிரதேச சபைக்கான வெள்ளிப்பதக்கம் வைபவ ரீதியாக கையளிப்பு


வடமாகாண ரீதியில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களில் விணைத்திறனாகவும் சிறப்பாகவும் செயற்பட்டமைக்காக மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு தேசிய ரீதியில் வெள்ளிப் பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், குறித்த விருது மற்றும் சான்றிதழ்களை வைபவரீதியாக நானாட்டன் பிரதேச சபையின் தவிசாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை நனாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

பாராளுமன்ற அரச கணக்கு குழுவினால் கடந்த 2017ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அரச அலுவலகங்கள் நிதி கோட்பாடுகளுக்கு இணங்குதலுக்கான மதிப்பீட்டு செயற்பாட்டில் விணைத்திறனாக செயற்பட்டமைக்காக வடமாகாணத்தின் 12 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கடந்த வாரம் தங்க பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடமாகாண ரீதியில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களில் விணைத்திறனாகவும் சிறப்பாகவும் செயற்பட்டமைக்காக நானாட்டான் பிரதேச சபைக்கு தேசிய ரீதியில் வெள்ளிப் பதக்கம் கிடைக்கப் பெற்றது.

குறித்த விருது மற்றும் சான்றிதழ்களை வைபவரீதியாக மன்னார் நானாட்டன் பிரதேச சபை தவிசாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (12) காலை நனாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது

குறித்த நிகழ்வில் நானாட்டன் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் ஜோகேஸ்வரம் உற்பட நானாட்டன் பிரதேச சபை உப தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

வட மாகாணத்தில் உள்ள மாநகர சபை ,நகர சபை , பிரதேச சபைகளில் குறித்த நானாட்டான் பிரதேச சபை மாத்திரமே தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE