Friday 29th of March 2024 01:15:41 AM GMT

LANGUAGE - TAMIL
துருக்கிக்கு F-35 போர் விமானங்களை விற்க போவதில்லை: டிரம்ப்

துருக்கிக்கு F-35 போர் விமானங்களை விற்க போவதில்லை: டிரம்ப்


அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு கவன்களை வாங்கியது துருக்கி. இதனால் அந்த நாட்டிற்கு F-35 போர் விமானங்களை விற்பனை செய்ய போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

துருக்கிக்கு அதிநவீன F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்திருந்தது. இதற்கிடையில் துருக்கி தன் நாட்டின் வான் பரப்பை பாதுகாக்க ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ஏவுகணை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தது. இதில்தான் பிரச்சினை எழுந்தது.

ரஷ்யாவிற்கும்- அமெரிக்காவிற்கும் புகைச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டிடம் இருந்து துருக்கி ஏவுகணை தடுப்பு கவன்களை வாங்குவது அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. இதனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, F-35 ரக போர் விமான தயாரிப்பு தொடர்பாக தொழில்நுட்ப பயிற்சி பெற அமெரிக்கா வந்திருக்கும் துருக்கி விமானிகளை வெளியேற்றுவோம் என்று முதல் மிரட்டல் விடுத்தது.

ஆனால் இதை கண்டுக்கொள்ளாத துருக்கி ஒப்பந்தப்படி ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை தடுப்பு கவன்களில் முதல் கவனை சமீபத்தில் துருக்கி அரசு பெற்றுக்கொண்டது. தொடர்ந்து இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதம் நடந்தது_

பின்னர் அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:

துருக்கி S-400 ஏவுகணைகள் தடுப்பு கவனை வாங்கியது முற்றிலும் நியாயமற்ற செயல் ஆகும். துருக்கியின் இந்த செயலால் இருநாட்டுக்கும் இடையேயான உறவு தற்போது கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,

அதிநவீன F-35 ரக போர் விமானங்களை துருக்கிக்கு அமெரிக்கா விற்பனை செய்யும் என்ற ஒப்பந்தம் கைவிடவுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE