Thursday 18th of April 2024 11:23:16 PM GMT

LANGUAGE - TAMIL
தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை

தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை


தனுஷ் நடிக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்குவதற்கு முன்பே தனுசுடன் இணைந்து ஒரு படம் எடுக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் இதற்கிடையில் ரஜினி ஓகே சொன்னதால் பேட்ட படத்தில் மும்முரமானார் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட படமும் வெளிவந்து செம ஹிட் அடித்தது. இதற்கிடையில தனுசும் பிஸியாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கான பணிகள் தொடங்கி உள்ளன. வெளிநாடுகளை மையமாக கொண்டு தாதாக்கள் படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக மலையாளத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவர் மலையாளத்தில் கதாநாயகியாக வலம் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. பேட்ட படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திருநாவுக்கரசு ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற உள்ளார்.

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.


Category: சினிமா, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE