Thursday 28th of March 2024 04:55:27 AM GMT

LANGUAGE - TAMIL
ரஷ்யாவில் வெடித்துச் சிதறியது அணு ஆயுத ஏவுகணையா?  (படங்கள்)

ரஷ்யாவில் வெடித்துச் சிதறியது அணு ஆயுத ஏவுகணையா? (படங்கள்)


ரஷ்யாவில் சென்ற வாரம் ஏற்பட்ட அணு கதிர் விபத்து, அணு ஆயுத சோதனை மூலம் ஏற்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.

1986 ஏப்ரல் மாதம் 26-ம் பதிதி ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய அணு உலைகளில் ஒன்றாக செர்னோபில் அணு உலையில் ஒரு ரியாக்டர் கோர் வெடித்து சிதறியது. ரஷ்யா பல வருடங்களாக எல்லா அணு உலைகளிலும் கவனிக்க தவறிய மிக முக்கியமான தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விபத்து ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

செர்னோபில் விபத்து ஏற்பட்டதால் தற்போது அந்த நகரமே மக்கள் பயன்படுத்துவதற்கு தகாத நகரமாக மாறியது. அங்கு இருந்த மக்கள் வெளியேற்றப்பட்னர். அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்ட விலங்குகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

இன்னும் அங்கு அணு கதிர் வீச்சின் தாக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

செர்னோபில் விபத்து ஏற்பட்ட போது முதல் சில நாட்களுக்கு அது குறித்து ரஷ்ய அரசு மௌனம் காத்தது. அதாவது மக்களிடம் செர்னோபில் அணு உலை வெடித்ததை சொல்லவே இல்லை. அணு உலையில் ஒரு விபத்து அதனால் புகை வருகிறது என்று சொல்லியது.

ஆனால் விஞ்ஞானிகள் அணு உலையின் ஆபத்தை விளக்கிய பின்பே அது குறித்த எச்சரிக்கை மக்களுக்கு அளிக்கப்பட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

இந்த நிலையில்தான் கடந்த வியாழக்கிழமை ரஷ்யாவில் நேனோக்சா ஏவுகணை சோதனை மையம் அருகே இருக்கும் வைட்-சி என்ற பகுதியில் உள்ள அணு மின்னணு நிலையம் அருகே பெரிய விபத்து ஏற்பட்டது.

அந்த மையத்தில் இருந்து பெரிய அளவில் புகையும் நெருப்பும் வந்தது. இதுகுறித்து பேட்டி அளித்த ரஷ்யாவின் அணு சக்தி மையம், அணு மின்னணு நிலையத்தில் செய்யப்பட்ட சோதனை ஒன்று தவறாக முடிந்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. சிறிய அளவில் அருகில் உள்ள ஊர்களில் அணு கதிர் வீச்சு இருக்கும். மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டது.

இந்த விபத்தில் 5 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. செர்னோபில் விபத்திற்கு பின் நடந்த பெரிய விபத்து இதுதான் என்று ரஷ்யா கூறியது. இந்த நிலையில் இது விபத்து இல்லை என்று அமெரிக்கா கூறி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் உளவுத்துறை இது தொடர்பாக அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விபத்தில் ஏவுகணை பொறியிலாளர் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.

இதை புடின் மக்களிடம் இருந்து மறைக்கிறார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை பற்றி டிரம்ப் இன்னும் வாய் திறக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் உளவுத்துறை சட்லைட் படங்களை வைத்து இந்த சம்பவத்தை விசாரிக்க உள்ளது.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE