Wednesday 17th of April 2024 09:03:15 PM GMT

LANGUAGE - TAMIL
க்ளாப் படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு

"க்ளாப்" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு


அதிக செலவில் மிக பிரமாண்டமான தடகள ஸ்டேடியத்தை க்ளாப் படத்தின் படக்குழுவினர் அமைக்க உள்ளார்கள். இந்த படத்தில் நடிகர் ஆதி ஹீரோவாக நடிக்கிறார்.

ஆதி தற்போது நடித்து வரும் படம் படம் ‘க்ளாப்’. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் படத்தை தயாரிக்கிறார். பிருதிவி ஆதித்யா இயக்குகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக மிக அதிகமான செலவில் பிரமாண்டமாக தடகள ஸ்டேடியம் போன்ற செட்டை அமைக்க இருக்கிறார்களாம்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் கூறியுள்ளதாவது:

க்ளாப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. திட்டமிட்டபடியே, துரித வேகத்தில் இதை படக்குழுவினர் செய்து முடித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் பிரமாண்டமாக, ஏராளமான பொருட்செலவில் ஒரு தடகள ஸ்டேடியம் உருவாக, அங்கே தொடங்குகிறது. இளையராஜா இந்த படத்துக்கு இசை அமைப்பதே மிக மிக பெருமை". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE