Thursday 18th of April 2024 12:24:32 AM GMT

LANGUAGE - TAMIL
100 விக்கெட்களை கைப்பற்றிய முதலாவது வீரர்!

100 விக்கெட்களை கைப்பற்றிய முதலாவது வீரர்!


டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-ருவென்டி போட்டிகளில் 100 விக்கெட்களை கைப்பற்றிய முதலாவது வீரர் என்ற பெருமை லசித் மாலிங்கவுக்கு கிடைத்துள்ளது.

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை எடுத்திருந்தது.

126 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 16 ஆவது ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

போட்டியில் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் லசித் மாலிங்க புதிய சாதனையை நிலைநாட்டினார்.

இதன்மூலம் இலங்கை அணி 37 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதேவேளை லசித் மாலிங்க நான்கு ஓவர்கள் பந்து வீசி 6 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

லசித் மாலிங்க 2007ஆம் இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது தென்னாபிரிக்க அணிக்கு எதிராக பந்துவீசி தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

லசித் மாலிங்க ஐந்து தடவைகள் ஹட்ரிக் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வசிம் அக்ரமின் நான்கு ஹட்ரிக்கள் சாதனையை அவர் இதன்மூலம் முறியடித்துள்ளார்.

லசித் மாலிங்க கென்யா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஏற்கனவே ஹட்ரிக் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE