Saturday 20th of April 2024 05:01:03 AM GMT

LANGUAGE - TAMIL
செரினா வில்லியம்சை வீழ்த்தி கனடாவின் பியான்கா சாம்பியன்

செரினா வில்லியம்சை வீழ்த்தி கனடாவின் பியான்கா சாம்பியன்


அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி கனடாவின் 19 வயது பியான்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில், நடப்பு ஆண்டில் நான்காவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்சும் கனடாவின் 19 வயது பியான்கா ஆண்ட்ரெஸ்சும் மோதினர்.

இதில் செரினா வில்லியம்சை 6-3,7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, கனடாவின் 19 வயது பியான்கா ஆண்ட்ரெஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

அதேவேளை கனேடிய டென்னிஸ் ரசிகர்கள் பியான்காவின் வெற்றிகைக் கொண்டாடி வருகின்றனர்.

பியான்கா நம்பமுடியாத அளவிற்கு விளையாடியது வெற்றியை கொடுத்திருக்கிறது. இதை நம்பமுடியவில்லை. நான் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும் என தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வெற்றியை வார்த்தைகளில் விளக்குவது மிகவும் கடினம். நான் இந்த தருணத்தில் மிகவும் கடினமாக உழைத்தேன். இந்த ஆண்டு எனது கனவு நனவாகியுள்ளது என சாம்பியன் பட்டம் வென்ற கனடாவின் பியான்கா தெரிவித்துள்ளார்.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE