Saturday 20th of April 2024 01:58:02 AM GMT

LANGUAGE - TAMIL
புதுமைத் தலைவா்கள் பட்டியலில் ஒரே ஒரு பெண்!

புதுமைத் தலைவா்கள் பட்டியலில் ஒரே ஒரு பெண்!


அமெரிக்காவில் உள்ள 100 புதுமை தலைவர்கள் பட்டியலை போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியிலில் ஒரே ஒரு பெண் மட்டுமே உள்ளார். அவரும் 75 ஆவது இடத்தையே பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பத்திரிகையான போர்பஸ் அவ்வவ்போது அமெரிக்கா , உலக அளவில் பணக்காரர்கள், மற்றும் உலக புகழ் பெற்ற தலைவர்களின் வரிசை குறித்து வெளியிட்டு வருவது வழக்கம்.

இப்போது வெளியான இந்த பட்டியலில் 99 ஆண்கள் மற்றும் ரோஸ் ஸ்டோர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி பார்பரா ரென்ட்லர் ஆகியோர் அடங்குவர்.

அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் , டெஸ்லாவின் எலோன் மஸ்க் இருவரும் பட்டியலில் முதல் இரு இடத்தைப் பிடித்தனர்.

பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நெட்ஃபிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாவது இடத்திலும், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

அப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார்.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE