Thursday 18th of April 2024 06:38:40 PM GMT

LANGUAGE - TAMIL
ஐ.நாவில் இந்தியா – பாகிஸ்தான் ஒருவா் மீது ஒருவா் குற்றச்சாட்டு! (காணொளி)

ஐ.நாவில் இந்தியா – பாகிஸ்தான் ஒருவா் மீது ஒருவா் குற்றச்சாட்டு! (காணொளி)


ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் பரஸ்பரம் ஒருவா் மீது ஒருவா் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

காஷ்மீரை இந்தியா உலகின் மிகப் பெரும் சிறைக்கூடமாக மாற்றியுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அதேநேரம் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஊக்குவித்து ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க வேண்டும் என இந்தியா தெரிவித்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42-வது கூட்டத்தொடா் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. நேற்று காஷ்மீா் விவகாரம் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

இதன்போதே இரு நாடுகளும் ஒருவா் மீது ஒருவா் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனா்.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் அல்ல. இது சர்வதேச அக்கறை கொண்ட பிரச்சனை.

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் மட்டும் 10 இலட்சத்துக்கும் அதிகமாக இந்தியப் படையினா் குவிக்கப்பட்டு அம்மாநிலம் முற்றுமுழுதாக இராணுவமயமாக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி கூறினார்.

ஜம்மு காஷ்மீரை உலகத்தின் மிகப்பெரிய சிறைக்கூடம் போன்று இந்தியா மாற்றியுள்ளது எனவும் அவா் குற்றஞ்சாட்டினார். எனினும் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்களை இந்தியா மறுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் இட்டுக்கட்டப்பட்டவை என இக்கூட்டத்தொடரில் இந்திய சார்பில் பங்கேற்ற அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் தாக்குர் சிங் தெரிவித்தார்.

உலக தீவிரவாதத்தின் மையமாக இருக்கும் பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.

காஷ்மீரில் இந்தியாவின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பெரும் தடையாக மாறியுள்ளது.

ஐநா மனித உரிமை பேரவையில் காஷ்மீா் விவகாரம் குறித்து பாகிஸ்தான் தாக்கல் செய்துள்ள அறிக்கை பொய்யானது என விஜய் தாக்குர் சிங் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டம் 370 ஐ நீக்குவது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும் அவா் தெரிவித்தார்.

இதேவேளை, பாகிஸ்தானில் சிறுபாண்மை மக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் குறித்தும் இந்தியா சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

பாகிஸ்தானில் உள்ள கிறித்தவ, சீக்கிய, ஷியா, அஹ்மதியா மற்றும் இந்து சிறுபான்மையினரை ஒழித்துக்கட்டுவதில் அந்நாடு தீவிரமாக உள்ளது என வெளியுறவுத் துறை முதன்மை செயலாளர் விமார்ஷ் ஆர்யன் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறான நிலையில் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு உரிமை கிடையாது எனவும் அவா் தெரிவித்தார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE