Friday 29th of March 2024 08:55:50 AM GMT

LANGUAGE - TAMIL
கனேடிய பிரதமரை சுட்டுக் கொல்வேன் என  மிரட்டிதாக குற்றச்சாட்டப்பட்டவா் விடுதலை!

கனேடிய பிரதமரை சுட்டுக் கொல்வேன் என மிரட்டிதாக குற்றச்சாட்டப்பட்டவா் விடுதலை!


கனேடியா் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சுட்டுக் கொல்வேன். பாராளுமன்றக் கட்டடங்களை குண்டுவைத்துத் தகா்ப்பேன் என அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சஸ்காட்செவன் நபர் நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னா் விடுவிக்கப்பட்டுள்ளார்.

53 வயதான டேவிட் பீட்டர்சன், பெப்ரவரி 12 அன்று அரச ஊழியர் ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு எதிரான வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில மாதங்களாக நடைபெற்று வந்த வழங்கில் நேற்று தீா்ப்பு வழங்கப்பட்டது.

பீட்டர்சன் மீதான அச்சுறுத்தல் குற்றச்சாட்டு வேண்டுமென்றே சோடிக்கப்பட்டதாக கருதுவதற்கு இடமிருப்பதாக நிபாவின் மாகாண நீதிமன்ற நீதிபதி ஹக் ஹாரடென்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த வழக்கு குறித்த விசாரணையின்போது தெரிவித்தார்

அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அரசு ஊழியர் பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளதாக கருத முடியாது.

ஆனால் அச்சுறுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அழைப்பு வந்த உடனேயே எந்த பதிவுகளும் குறிப்புகளும் எடுக்கப்படவில்லை எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

நான் குற்றம் செய்யவில்லை. எனினும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு வழக்கை துரிதமாக முடித்து வெளியேற விரும்புகிறேன் என கடந்த மாதம் பீட்டர்சன் தெரிவித்தார்.

ஆனால் நீதிபதி ஈனஸ் கார்டினல் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்நிலை தொடா்ந்த இந்த வழக்கு விசாரணைகளின் பின்னா் குற்றச்சாட்டக்களில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை பீட்டர்சன் விடுவிக்கப்பட்டார்.

நான் மிகவும் பயந்தேன். என்ன தீா்ப்பு வெளியாகப் போகிறதோ என மிகவும் பதட்டத்துடன் இருந்தேன் என வழங்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னா் நீதிமன்றத்துக்கு வெளியே வைத்து செய்தியாளா்களிடம் பீட்டர்சன் தெரிவித்தார்.

தீா்ப்பு குறித்து நான் எதையும் முன்னதாக யூகிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் இந்தத் தீா்ப்பு எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும் அவா் குறிப்பிட்டார்.

தானும் பீட்டர்சனும் ஒக்டோபர் 2018 மற்றும் பெப்ரவரி 12 இற்கு இடையில் குறைந்தது 10 முறை தொலைபேசியில் பேசியதாக கனடா இறை வரி சேகரிப்பு பணியன அதிகாரியான போல் ஸ்வின்சன் நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.

கடைசி அழைப்பின் போது பீட்டர்சன் பேச்சு வித்தியாசமானதாக இருந்தது. மன அழுத்தம் உடையவா் போன்று அவா் பேசினார்.

ட்ரூடோவின் பெயரை குறிப்பிட்டு அவா் அச்சுறுத்தும் தொனியில் பேசினார். நான் ட்ரூடோவை சுட்டுக் கொல்லப்போகிறேன் என்றார் என நடந்த சம்பவம் குறித்து அரச அதிகாரி போல் ஸ்வின்சன் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE