Thursday 28th of March 2024 11:43:01 PM GMT

LANGUAGE - TAMIL
இலங்கை இனப்படுகொலைக்கு நீதி கோரி மனித உரிமைகள் ஆணையாளருக்கு மனு!

இலங்கை இனப்படுகொலைக்கு நீதி கோரி மனித உரிமைகள் ஆணையாளருக்கு மனு!


இலங்கை தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரி திரட்டப்பட்ட 6,251 கையொப்பங்களுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரை போ்ள் (PEARL - People for Equality and Relief in Lanka ) தன்னாா்வ தொண்டு அமைப்பு பிரதிநிதிகள் கடந்த 16 ஆம் திகதி சந்தித்து பேசினா்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 (2015) நிறைவேற்ற இலங்கை தொடர்ச்சியாக மறுத்து வருவருகிறது.

இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் தொடா்கின்றன.

இராணுவ சோதனை நடைமுறைகள் தொடா்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் போ்ஸ் தன்னாா்வ தொண்டு அமைப்பின் பிரதிநிதிகள் இதன்போது ஐ.நா. ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனா்.

மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது அமர்வின் போது, முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப் படுகொலையே என போ்ள் வலியுறுத்தியது.

மேலும் இலங்கையின் போா்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க குற்றவியல் நீதிமன்றின் தேவை குறித்தும் வலியுறுத்தி பேரவைக்கு மனுவொன்றை இந்த அமைப்பு வழங்கியது.

இந்நிலையில் தமிழ் இனப்படுகொலையின் உச்சமான முள்ளவாய்க்கால் படுகொலைகளின் 10 ஆண்டை நினைவுகூரும் 2019 மே 12 ஆம் திகதி இனப்படுகொலைக்கு நீதி கோரும் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை போ்ள் அமைப்பு ஆரம்பித்தது.

ஒகஸ்ட் 31 ஆமும் திகதி வரை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களிடம் இருந்து 6,251 கையொப்பங்களை PEARL சேகரித்தது.

இந்த மனு டெனிஸ், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் , ஸ்பானிஷ் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் மொழிபெயா்ப்புச் செய்யப்பட்டது.

தி டிப்ளமோட், ஒபினியோ ஜூரிஸ் மற்றும் தமிழ் கார்டியன் ஆகியவற்றில் இந்த மனு வெளியிடப்பட்டு தமிழ் இனப் படுகொலை குறித்து தெளிவுட்டப்பட்டு நீதி கோரும் கையெப்பங்களை திரண்ட ஊக்குவிக்கப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை சட்டப்பூர்வமாக நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே இதனை இனப்படுகொலை என அங்கீகரிப்பதன் மூலம் சர்வதேச சமூகம் தமிழ் மக்களுடன் நிற்க வேண்டும் என போ்ள் தன்னாா்வ தொண்டு அமைப்பின் நிர்வாக இயக்குனர் தாஷா மனோரஞ்சன் கூறினார்.

போ்ள் அமைப்பு இலங்கையின் குறித்து கரிசரைன கொண்ட தமிழ் மனித உரிமை ஆர்வலர்கள் தலைமையிலான இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இலங்கையில் மனித உரிமைகளுக்காக போ்ள் வாதிட்டு வருகிறது.

இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போரில் பாதிக்கப்பட்டு உயிா் தப்பியவா்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தகவல்களை போ்ள் திரட்டி வெளிப்படுத்தி வருகிறது.

அத்துடன் தமிழா் நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களையம் அம்பலப்படுத்தும் முயற்சியிலும் போ்ள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE