Friday 19th of April 2024 05:36:30 AM GMT

LANGUAGE - TAMIL
பிகில் டிரைலர் ரிலீஸ் திகதி  அறிவிக்கப்பட்டது!

பிகில் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டது!


எப்போ? எப்போ? என்று சமூக வலைதளங்களில் கேள்வி மேல் கேள்வியாக எழுப்பி வந்த நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் டிரைலர் எப்போது வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படம் பிகில். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாளை ஒட்டி வெளியிட்டனர். அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் போஸ்டரில் விஜய் இடம்பிடித்து இருந்தார். இந்த பர்ஸ்ட் லுக் வெகுவாக வைரல் ஆனது.

படம் பற்றி எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதற்கு தீனிப் போடுவது போல் படக்குழுவினரும் அவ்வபோது லிரிக் வீடியோக்களை வெளியிட்டனர். பின்னர் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்பதால் டிரைலர் எப்போது வரும் என்று சமூக வலைதளங்களில் கேள்வி மேல் கேள்வியாக ரசிகர்கள் எழுப்பி வந்தனர். ஆனால் படக்குழு அமைதியாக டிரைலர் வெளியிடப்படாமல் இருந்ததால் ரசிகர்கள் கோபமும் அடைந்தனர்.

படத்தின் டிரைலரை உடனடியாக வெளியிட வேண்டுமேன சமூக வலைதளங்களின் மூலம் தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேண்டுகோள் விடுத்துவந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் பிகில் படத்தின் டிரைலர் வெளியிடும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

பிகில் படத்தின் மிரட்டலான டிரைலர் வரும் சனிக்கிழமை (12) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர். டிரைலரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE