Wednesday 24th of April 2024 08:09:21 AM GMT

LANGUAGE - TAMIL
விமர்சனம் செய்த ரசிகருக்கு செம பதிலடி கொடுத்த மித்தாலிராஜ்!

விமர்சனம் செய்த ரசிகருக்கு செம பதிலடி கொடுத்த மித்தாலிராஜ்!


கிரிக்கெட்டில் மட்டுமல்ல பதிலடியிலும் சிக்ஸர் அடிப்பேன் என்று தன்னை விமர்சனம் செய்தவருக்கு செம "ஆப்பு" வைத்துள்ளார் பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் என்று பெருமையாக அழைக்கப்படும் மித்தாலி ராஜ்.

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என அழைக்கப்படுபவரும், 20 ஆண்டுகளால் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்திய அணிக்காக தளராத பங்களிப்பை கொடுத்து வரும் மித்தாலி ராஜிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பல போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் இவர். கிரிக்கெட் உலகில் 20 ஆண்டுகளாக விளையாடி வரும் ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் விளையாடி 20 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனையை செய்தார். இவரை இந்திய கிரிக்கெட் வாரியம் பாராட்டி கவுரவித்தது.

மித்தாலிராஜ்க்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தனர்.

அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், ஒரு அற்புதமான செயல்திறன். தென்னாப்பிரிக்கா பெண்களுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது மிக சிறப்பு. மித்தாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் வித்தியாசத்துடன் அணியை வழிநடத்துதல் மற்றும் அற்புதமாக 20 ஆண்டுகளை கடந்ததற்கு வாழ்த்துக்கள் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு பாராட்டுக்கள் தெரிவித்து இருந்தார்.

இந்த பாராட்டுக்கு நன்றி தெரிவித்து மித்தாலிராஜ், என் வாழ்நாள் முழுவதும் பார்த்து வளர்ந்த ஒரு நபரால் பாராட்டப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது .. நன்றி சாம்பியன் என்று தன் மகிழ்ச்சியை தெரிவித்து பதிவிட்டார். இதற்குதான் சுகு என்பவர் மித்தாலிக்கு தமிழ் தெரியாது. அவர், ஆங்கிலம் தெலுங்கு, இந்தி மொழியில் பேசுவார் என்று பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களை எழுப்பியது.

சாதனை படைத்த பெண்ணை இப்படியா பேசுவது என்று பலரும் மித்தாலிராஜுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் கிரிக்கெட்டில் மட்டுமல்ல பதிலடியிலும் சிக்ஸர் அடிப்பேன் என்பது போல் அந்த ரசிகருக்கு மித்தாலிராஜ் பதில் தெரிவித்துள்ளார்.

தமிழ் என் தாய் மொழி.. நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை. எல்லாவற்றிற்கும் மேலாக நான் இந்தியனாக மிகவும் பெருமைப்படுகிறேன். என்று பதிலடி கொடுத்துள்ளவர் மேலும் “என் அன்பான சுகுவே, என்னுடைய ஒவ்வொரு இடுகையிலும் நீங்கள் தொடர்ந்து விமர்சிக்கிறீர்கள். நான் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அன்றாட ஆலோசனை என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு செம வைரலாகி வருகிறது. ரசிகருக்கு பதிலடியும், அதே நேரத்தில் குட்டும் வைத்துள்ள மித்தாலிராஜுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE