Thursday 18th of April 2024 07:20:22 PM GMT

LANGUAGE - TAMIL
சிண்ட்ரெல்லா படத்தில் வில்லியாக நடித்துள்ள சாக்‌ஷி!

சிண்ட்ரெல்லா" படத்தில் வில்லியாக நடித்துள்ள சாக்‌ஷி!


பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் அழுகை, கோபம் என்று ரணகளப்படுத்திய சாக்‌ஷி தற்போது பேய் படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.

நடிகை ராய் லட்சுமி நடித்துள்ள படம் 'சிண்ட்ரெல்லா'. திகில் ஹாரர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் பற்றி வினோ வெங்கடேஷ் கூறியிருப்பதாவது:

"இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால் மற்ற பேய்ப் படங்களுக்கு இங்கே போடப்பட்டுள்ள ஹைதர் காலத்து பார்முலாவில் இருந்து விலகி அனைத்து வித்தியாசமான அம்சங்களுடன் விறுவிறுப்பான படமாக உருவாகி உள்ளது. ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை கண்டிப்பாக உடைக்கும்.

இதுவரை அவரை கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் வேறு ஒரு கதாபாத்திரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். பிக்பாஸ் 3 யில் பங்கேற்ற சாக்‌ஷி அகர்வால் இந்த படத்தில் வில்லியா நடித்துள்ளார். அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் திரையில் தீப்பிடிக்க வைக்கும்படியான பரபரப்புடன் இருக்கும்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் டீசரை இயக்குநர்கள் ராம்கோபால் வர்மாவும், எஸ்.ஜே.சூர்யாவும் வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE