Friday 19th of April 2024 03:11:41 PM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?- 21.10.2019

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?- 21.10.2019


மேஷம்

மேஷம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியா பாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற் பகல் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழை வதால் மனஉளைச்சல் ஏற்ப டும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.வியாபாரத்தில் புதிய முயற் சியை தவிர்க்கவும்.பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்கக் கூடும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

கன்னி

கன்னி: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டு வீர்கள். காணாமல் போன முக் கிய ஆவணம் கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான நாள்.

துலாம்

துலாம்: எதையும் சாதிக் கும் தன்னம்பிக்கை வரும். பழைய உறவினர், நண்பர் களை சந்திப்பீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தா லோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வரவேண் டிய பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசு

தனுசு: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மகரம்

மகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப் பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோ கத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவு வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வழக் கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தைரி யமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE