Thursday 28th of March 2024 04:38:47 AM GMT

LANGUAGE - TAMIL
நீண்ட தூரம் பறந்து சாதனை படைத்த பயணிகள் விமானம்!(படங்கள்)

நீண்ட தூரம் பறந்து சாதனை படைத்த பயணிகள் விமானம்!(படங்கள்)


வேறு இடங்களில் இடைநிறுதத்தாமல் உலகில் நீண்ட தொலைவு பறக்கும் விமானம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து புறப்பட்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று காலை தரையிறங்கியது.

நியூயோர்க் முதல் சிட்னி வரை 19 மணிநேரம் 16 நிமிடங்கள் பயணித்து இந்த விமானம் சிட்னியை அடைந்தது.

குவான்டாஸ் நிறுவனத்தின் குவாண்டாஸ் போயிங் 787-9 பயணிகள் விமானமே இவ்வாறு நீண்ட தூரம் பயணம் செய்துள்ளது.

நியூயோர்க் நகரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 49 பேருடன் புறப்பட்ட போயிங் 787-9 ரக விமானத்தில் இடைநிறுத்தாமல் பயணிக்கும் அளவுக்கு போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. ஏறக்குறைய 16 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் பறக்கும் அளவுக்கு விமானத்தில் எரிபொருள் இருந்தது.

இந்நிலையில் 19 மணிநேரத்துக்கும் அதிகமாக வானில் பறந்து நேற்று காலை சிட்னி நகரை அடைந்தது.

19 மணிநேரத்துக்கும் மேலாக இடைநிறுத்தாமல் விமானம் பறந்துள்ளது வரலாற்று நிகழ்வு. பயணிகளையும், விமானிகளையும் எவ்வாறு முகாமை செய்வது என்பதை இதில் கற்றுக்கொண்டோம் என குவான்டஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஜோய்ஸ் தெரிவித்துள்ளார்.

குவான்டாஸ் நிறுவனம் அவுஸ்திரேலியா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, 19 மணிநேர இடைவிடாத பயணம் எவ்வாறு பயணிகள் உடல்நலத்தைப் பாதிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்தது.

விமானம் பயணித்தவுடன் பயணிகள் அனைவரும் தங்களின் கைக்கடிகாரத்தின் நேரத்தை சிட்னி நேரத்துக்கு மாற்றிவைத்தனர்.

பயணிகள் மற்றும் விமானிகளின் உடல்நிலை, மூளையின் அதிர்வலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

வழக்கமாக இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டவுடன் இரவு உணவு அளிக்கப்பட்டு பயணிகள் தூங்குவதற்கு அறிவுறுத்தப்படுவார்கள்.

ஆனால், இந்த விமானத்தில் இரவு உணவுக்குப் பதிலாக மதிய உணவு அளித்து 6 மணிநேரம் விழித்திருக்கச் செய்து அதன்பின் பயணிகளுக்கு இரவு உணவு அளிக்கப்பட்டு பயணிகள் தூங்க அனுமதிக்கப்பட்டார்.

6 மணிநேர பயணத்துக்புப் பின் பயணிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு, வெளிச்சமான திரை, விளக்குகளைப் பார்க்காமல் தூங்குமாறு அறிவுறுத்தப்பட்டார்கள்.

விமானத்தை இயக்குவதற்காக வழக்கமாக இரு விமானிகள் இருக்கும் நிலையில் இந்த விமானத்தில் 4 விமானிகள் பயணித்தனர். 4 விமானிகளும் மாறி மாறி விமானத்தை இயக்கினர்.

இதுவரை அதிக தூரம் விமானத்தை இயக்கி முதலிடத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இருந்துவந்தது. சிங்கப்பூரிலிருந்து நியூயோர்கிற்கு 15344 கிலோமீற்றரை 18.25 மணித்தியாலயங்களில் இந்த விமானம் பறந்து சென்றது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE