Tuesday 16th of April 2024 02:38:31 AM GMT

LANGUAGE - TAMIL
பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி!

பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி!


இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கனடா வீராங்கனை மிட்செல் லீயை வீழ்த்தினார்.

பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் பாரீசில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் பிரிவில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

இந்த போட்டியில் இந்திய நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவை சேர்ந்த மிட்செல் லீயுடன் மோதினார். ஆரம்பத்தில் இருந்தே வலுவான ஆட்டைத்தை வெளிப்படுத்தினார் சிந்து. இதனால் 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் மிட்செல் லீயை வீழ்த்தினார். பி.வி.சிந்துவின் அதிரடி ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதேபோல் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சுபாங்கர் தேவ் 15-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் தாமி சுகிர்டோவுக்கு (இந்தோனேஷியா) அதிர்ச்சி அளித்து வெற்றி பெற்றார்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE