;

Monday 25th of May 2020 10:46:53 AM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?- 05.11.2019

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?- 05.11.2019


மேஷம்

கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிப்புடன் செயல் படுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சிய டைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும் நாள்.

ரிஷபம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண் பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைநீங்கும் நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் தொடங்கு வதால் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும் பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாக தாமதமாகும். உத்தி யோகத்தில் சக ஊழியர்களிடம் கடிந்து கொள் ளாதீர்கள். காரிய தாமதம் ஏற்படும் நாள்.

கடகம்

உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும் நாள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப் பார்கள். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். திறமை வெளிப்படும் நாள்.

சிம்மம்

வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர் கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிகொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தி யோகத்தில் சவால்களை சாதனைகளாக மாற்றும் நாள்.

கன்னி

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியா பாரத்தில் லாபம் பெருகும். சக ஊழியர்கள் சாதகமாவார்கள். புதுமை படைக்கும் நாள்.

துலாம்

பழைய பிரச்சினைக ளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவா தங்கள் வந்து போகும். பணப் பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும்.உத்தி யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நல்லன நடக்கும் நாள்.

விருச்சிகம்

திட்டவட்டமாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும்.பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உத்தி யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை கொடுப்பார்கள். வெற்றி கிட்டும் நாள்.

தனுசு

குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கிஅமைதி ஏற்படும். அழகு, இளமை கூடும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர் களை அனுசரித்து போங்கள். முன் கோபத்தால் பகை உண்டாகும். லேசாக தலை வலிக்கும்.உத்தியோகத்தில் தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கும்பம்

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். வாகனத்தில் கவனம் தேவை. முக்கிய கோப்புகளை கையாளும் பொழுது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் மோதல் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

மீனம்

பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்ற வர்கள் ஆதாயமடைவார்கள். ஆன்மீகப்பெரியோரின் ஆசி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கை யாளரின் தேவையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE