Tuesday 16th of April 2024 12:57:24 AM GMT

LANGUAGE - TAMIL
ஈரானில் நில நடுக்கம் 5 பேர் பலி: 300 பேர் காயம்!

ஈரானில் நில நடுக்கம் 5 பேர் பலி: 300 பேர் காயம்!


ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 5 பேர் பலியாகினர். 300 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அசர்பஜன் மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.17 மணியளவில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ. என்றும் இந்த நிலநடுக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் அமெரிக்கப் புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரானில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 600 பேர் பலியாகினர். 9,000க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானின் பாம் நகரில் ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 26,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE