Tuesday 23rd of April 2024 12:42:51 PM GMT

LANGUAGE - TAMIL
அமெரிக்கா- கலிபோர்னியாவில் விமான விபத்து: விமானி பலி!

அமெரிக்கா- கலிபோர்னியாவில் விமான விபத்து: விமானி பலி!


அமெரிக்காவின் -கலிபோர்னியா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதன் விமானி பலியானார்.

விமானம் மோதிய வீடு பலத்த சேதமடைந்தது. எனினும் வீட்டில் இருந்த தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கேபிள் விமான நிலையத்திலிருந்து இன்று காலை இந்த விமானம் புறப்பட்டது.

சிறிது நேரத்தில் திடீரென விமானம் அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது மோதியது.

விமானம் மிக அருகில் பறப்பது போன்று சத்தம் கேட்டது. இதையடுத்து பார்க்கையில் விமானம் மிகவும் தாழ்வாக பறந்து வந்து கொண்டிருந்தது. பின்னர் திடீரென மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது என இதனை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்துக்குள்ளான விமானம், இருவர் அல்லது மூவர் பயணிக்ககூடிய ஒற்றை எஞ்சின் உடைய சிர்ரஸ் எஸ்.ஆர்- 22 வகையைச் சேர்ந்தது. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE