Thursday 28th of March 2024 11:09:42 AM GMT

LANGUAGE - TAMIL
இன்னும் 8 நாட்களில் முடிகிறது மைத்திரியின் பதவி!

இன்னும் 8 நாட்களில் முடிகிறது மைத்திரியின் பதவி!


"இன்னும் எட்டு நாட்களில் எனது ஜனாதிபதி பதவி முடிவுக்கு வருகின்றது, இதுவரை காலமாக எனது சகல செயற்பாடுகளிலும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாதுகாப்புப் படையினர், பொலிஸ் அதிகாரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்."

- இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இலங்கையின் புதிய இராணுவ தலைமையகம் இன்று பத்தரமுல்ல பிரதேசத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படைத் தலைமையகங்கள் ஒரு கட்டடத்தின் கீழ் கொண்டுவரப்படுவதன் மூலமாக பல நன்மைகள் உள்ளன. எனினும், இந்த வேலைத்திட்டம் உருவாக்க பல தடைகள் ஏற்பட நிதி தொடர்பான விடயங்களே காரணமாகும். திறைசேரியின் மூலமாக ஒதுக்கும் நிதித் தொகைக்கு அமையவே எம்மால் அடுத்தகட்ட நடவடிகைகளை முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது. இன்றுள்ள நவீன தொழிநுட்ப இயந்திரங்களுடன் நிர்வாகத்தையும் கொண்டு நடத்தக்கூடிய வகையில் புதிய கட்டட மையம் தேவைப்பட்டது. அதனால்தான் காலம் கடந்தாலும் கூட இவ்வாறான கட்டடம் ஒன்றை உருவாக்க வேண்டியிருந்தது.

அதேபோல், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கடற்படை மற்றும் விமானப்படைத் தலைமையகக் கட்டடங்களையும் முழுமைப்படுத்த முடியும் என நான் நம்புகின்றேன். எமது நாட்டின் மிகப்பெரிய வேலைத்திட்டங்களை முப்படைக்குக் கொடுத்துச் செய்ததில் முழுமையான திருப்தி உள்ளது. இதைத் தனியார்துறைக்குக் கொடுத்திருந்தால் நேர்த்தியானதும் திருப்தியானதுமான வேலைத்திட்டம் உருவாகியிருக்காது.

இன்னும் எட்டு நாட்களில் நான் ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறும் காரணத்தால் முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் இருக்கும் இவ்விடத்தில் நான் சில விடயங்களைக் கூற வேண்டும். எனது 5 வருடப் பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் ஜனாதிபதி என்ற வகையிலும் நடைமுறைப்படுத்திய அனைத்து நடவடிக்கைகளையும் வெற்றிகொள்வதற்கு முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்புத் தரப்பினரும் எனக்கு வழங்கிய பங்களிப்புகளுக்கும், இதுவரை காலமாக எனது சகல நடவடிக்கைகளிலும் எனக்கு உதவிய இராணுவ மற்றும் பொலிஸ் படையினருக்கும் எனது தனிப்பட்ட நன்றிகளையும் கௌரவத்தையும் தெரிவிக்கின்றேன்.

தேசிய பாதுகாப்பு, நாட்டின் பௌதீக அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்பேணல் நடவடிக்கைகளில் முப்படையினரும் மேற்கொண்டுவரும் பணி அளப்பரியது" - என்றார்.

இராணுவ அதிகாரிகளுக்கான சேவை பதக்கங்களும், சிவில் பணிக்குழாமினருக்கான சேவை பதக்கங்களும் ஜனாதிபதியால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. ஜனாதிபதிக்கும் விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE