Tuesday 23rd of April 2024 03:24:34 PM GMT

LANGUAGE - TAMIL
அபிவிருத்தியின் முன்னணி மாவட்டமாக மாறும் யாழ்ப்பாணம்!

அபிவிருத்தியின் முன்னணி மாவட்டமாக மாறும் யாழ்ப்பாணம்!


* யாழ்ப்பாணத்திற்கு அனைத்து உட்கட்டமைப்பு வசதி!

*15 பிரதேச செயலகங்களிலும் தொழில்நுட்ப கல்லூரிகள்!

*விவசாயிகளுக்கு பசளை மானியம்!

*இலவச சீருடை, இலவச பாதணி, இலவச பகலுணவு!

*பாலர் பாடசாலை ஆசிரியருக்கு அரச சம்பளம்!

*யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச மாநாடு!

*யுத்தத்தினால் அபயவங்களை இழந்தவர்களுக்கு விசேட வேலைத்திட்டம்!

ஜனாதிபதி தோ்தலின் பின்னர் யாழ்.மாவட்டம் அபிவிருத்தியில் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ, அதற்காக தாம் உறுதிபூணுவதாகவும் கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவின் தோ்தல் பிரசார கூட்டம் இன்று நல்லூர், சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சஜித், யாழ். மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி, அடிப்படை வசதிகள், சுத்தமான குடிநீர், வீடு, காணிப்பிரச்சினை, சுற்றுலாத்துறையுடன் தொடர்புள்ள பிரச்சினைகள் என்று பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.

அத்துடன், சமூக சேவை தொடர்பான விடயங்களை மேம்படுத்தல், இங்குள்ள மீன்பிடி கைத்தொழில் பிரச்சினையை நிவர்த்தி செய்து அதனை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும்.

எதிர்வரும் 16 ஆம் திகதி உங்கள் வாக்குகள் மூலம் நான் ஜனாதிபதியானதன் பின்பு யாழ்.மாவட்டத்தை அபிவிருத்தியின் முன்னணியில் திகழ்கின்ற ஒரு மாவட்டமாக மாற்றியமைக்க உறுதிபூணுகின்றேன்.

நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு இலவச சீருடைகள், ஒரு பாதணி, பகல் போசனம் என்பன இலவசமாக வழங்கப்படும் . பாலர் பாடசாலைய கட்டியெழுப்ப பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு அரச சம்பளம் வழங்கப்படும்.

பாலர் பாடசாலைகளுக்கான மண்டபங்கள் புனரமைக்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பகல் போசனமும் வழங்கப்படும்.அத்துடன் பாலர் பாடசாலை கல்வியை முற்றாக இலவசக் கல்வி திட்டத்துடன் இணைத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன் என்றார்.

விவசாய துறையை கட்டியெழுப்ப நெல் பயிர்ச்செய்கை, சேனைப்பயிர்ச்செய்கை, தேயிலை, இறப்பர், தென்னை பயிர்ச்செய்கை அனைத்துக்கும் ஏற்ற பசளைகளை இலவசமாக என்னுடைய அரசாங்கத்தில் வழங்குவேன்.

யாழ். மாவட்டத்தின் 15 பிரதேச செயலகங்களிலும் தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்கப்படும்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச மாநாடுகளை வடக்கு, கிழக்கில் நடத்துவேன் விசேடமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் இருக்கின்றது . இதில் இருக்கின்ற சிறுகைத்தொழில் புரிகின்ற - சுயதொழில் புரிகின்றவர்கள், பாரிய கைத்தொழினை பெற்றுக்கொள்பவர்களுக்கு சலுகை அடிப்படையில் அனைத்து உதவித்திட்டங்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

யுத்தத்தினால் அபயவங்களை இழந்த அங்கவீனர்களுக்கு விசேட வேலைத்திட்டத்தினை இந்த நாட்டில் நாங்கள் அங்கத்துவம் வகிக்கும் அரசில் செய்வோம். வடக்கு கிழக்கினை நாங்கள் அபிவிருத்தியின் உச்சகட்டத்தில் திகளும் மாகாணங்களாக மாற்றியமைப்போம் என உறுதியாகக் கூறுகின்றேன்.

யாழ்.மாவட்டத்தில் 15 பிரதேச செயலகங்கள் உள்ளது 435 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன 1611 சிறு கிராமங்கள் இருக்கின்றன. இதை உள்ளடக்கிய அனைத்து தொகுதிகளையும் அபிவிருத்தி செய்வேன் என உறுதியாகக் கூறுகின்றேன்.

ஒருமித்த நாட்டில் இன, மத, மொழி, கட்சி பேதமின்றி ஒரே குடையின் கீழ் ஒருதாய் மக்களாக ஒரு சட்டத்தின்கீழ் வாழக்கூடிய ஒரு எதிர்கால அரசாங்கத்தில் நான் உருவாக்குவேன்.- என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE