கோலிவுட்டில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்த ஜீவா தற்போது ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் நடித்த பல படங்கள் சுமார் ரகங்களாக அமைந்தன.
இதனால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நடிகர் ஜீவாவுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான "கீ" படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில் ரத்னசிவா இயக்கத்தில் நடித்து வரும் "சீறு" படத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளார் ஜீவா என்கிறார்கள்.
இந்த படத்தில் ஜீவா, ரியா சுமன் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி நடித்த றெக்க படத்தை இயக்கியவர்தான் ரத்னசிவா. இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படம் வரும் கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 20ம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக சீறு உருவாகி உள்ளது என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.