;

Thursday 16th of July 2020 02:25:11 AM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?-15.11.2019

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?-15.11.2019


மேஷம்

மேஷம்: துணிச்சலான சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிகஅக்கரை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன் மனைவிக்குள் மனவிட்டு பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான, சவாலானகாரியங்களை எல்லாம் கையில்எடுத்துக் கொண்டு இருக்காதீர்கள். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகள் தவிருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். வாகனம் அடிக்கடி தொந்தரவுத் தரும்.உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சல் தரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்கள் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்திவரும். வியாபாரத்திற்கு புது இடத்தை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் மனதைக் கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவி னர்கள், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றிக் காண்பீர்கள். பாராட்டுப் பெறும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழையபாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புக்கள் வரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்ந்து கொண்டு இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டி இருக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். சிறு சிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பிஏமாற வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டியநாள்.

தனுசு

தனுசு: தனது பலம், மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். மனைவி வழியில்பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தைச் சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்

மகரம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். அரசுகாரியங்கள் சாதகமாக முடியும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார கள். பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.

கும்பம்

கும்பம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டு. நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவை பெறும் நாள்.

மீனம்

மீனம்: பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச்செலவுகள் ஏற்படும். பழைய கடனை தீர்க்க புது வழிகளை யோசிப்பீர்கள் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதிஉண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகும் நாள்


Category: வாழ்வு, பகுப்பு
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE