Thursday 28th of March 2024 08:57:11 PM GMT

LANGUAGE - TAMIL
தேர்தல் கடமையில் ஈடுபடுவோர் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும்!

தேர்தல் கடமையில் ஈடுபடுவோர் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும்!


ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களுக்கும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களும் இந்த தேர்தலின் போது தமக்குரிய கௌரவமான பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதுடன் பக்க சார்பின்றி செயலாற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிக்கையில் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து ஒவ்வொரு வாக்களாளர்களும் போட்டியிடும் வேட்பாளர்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கைக்குப் பொறுப்பானவர்களாக தேர்தல் பணியாளர்கள் நடந்துகொள்ள வேண்டும்.

தேர்தல் காலத்தில் வாக்காளர்கள், வேட்பாளர்கள், மற்றும் வேட்பாளர்களின் அங்கீகாரம் பெற்ற முகவர்களுடன் நட்பு ரீதியாக நடந்துகொள்ள வேண்டும்.

தேர்தல் கடமையில் உள்ளவர்கள் எவருக்கும் அஞ்சத் தேவையில்லை. தேர்தல் ஆணைக்குழுவுக்கும் நீதிமன்றத்துக்கும் மட்டுமே தேர்தல் பணியாளர்கள் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE