Wednesday 24th of April 2024 09:12:59 AM GMT

LANGUAGE - TAMIL
அமெரிக்கா, இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அமெரிக்கா, இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!


அமெரிக்காவின் - அலாஸ்கா மாகாணம் மற்றும் இந்தோனேசியா – பப்புவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

அலஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அலாஸ்காவின் அடக்கிலிருந்து 65 மைல் தொலைவில் உள்நாட்டு நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 4:54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

கடந்த 10 நாட்களுக்குள் அலஸ்காவில் ஏற்பட்ட இரண்டாது நிலநடுக்கம் இதுவாகும். முன்னர் ரிக்டரில் 3.0 ஆக நில நடுக்கம் பதிவாகியிருந்தது.

இதேவேளை, இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE