Thursday 28th of March 2024 07:07:32 AM GMT

LANGUAGE - TAMIL
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -01.12.2019

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -01.12.2019


மேஷம்

மேஷம்: உணர்ச்சி பூர்வமாகச் செயல்படுவதை விட்டு அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து, பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புக்கள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாகப் பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டி இருக்கும். விமர்சனங்களைக் கண்டு அஞ்சவேண்டாம். சிறு சிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்கள், சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.

கன்னி

கன்னி: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி வந்து சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

துலாம்

துலாம்: பாலிய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத்தீர்க்க புது வழிகள் யோசிப்பீர்கள் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால், போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

தனுசு

தனுசு: கணவன், மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வராது என்று இருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

மகரம்

மகரம்: இராசிக்குள் சந்திரன் இருப்பதால், சிக்கலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டு இருக்காதீர்கள். உங்களைப் பற்றிய ரகசியங்களை, வெளியில் சொல்லுவதைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில், அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாகப் பேசுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில், கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மீனம்

மீனம்: சவாலான விஷயங்களை யும், சாமர்த் தியமாகப் பேசி முடிப்பீர்கள். உற்றார், உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். நெருங்கியவர்களுக் காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய இடத்தில் கடையை மாற்றி, அதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர் பாராத நன்மைகள் உண்டாகும் நாள்


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE