மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப் பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத் தாருடன் இணக்கமாகச் செல்வது நல்லது. மற்றவர்களின் தவறை சுட்டிக்காட்டுவதன் மூலம், சச்சரவுகளில் சிக்கு வீர்கள். உத்தியோகத்தில், வளைந்து கொடுத்து போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: நீங்கள் செய்யக் கூடிய காரியங்களில், தடைகளும் தாம தங்களும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல்கள், வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.
மிதுனம்
மிதுனம்: உங்களுக்கு கிடைக்கும் சின்ன சின்ன , வாய்ப்புக்களையும், சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். உற்றார், உறவினர் ஆதரவு பெருகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். கடன் பிரச்சினைகளை தீர்த்து வைப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.
கடகம்
கடகம்: உங்கள் காரியங்களில், கண்ணும், கருத்துமாக செயல்படுவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்து வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். கண்ணும், கருத்துமாகச் செயல்படும் நாள்.
சிம்மம்
சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கித்துடிப்புடன் செயல்படத் தொங்கு வீர்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். மனசாட்சி படி செயல்பட வேண்டிய நாள்.
கன்னி
கன்னி: சந்திராஷ்டமம் நடந்துகொண்டிருப்பதால், எதிர் பார்ப்புகள் அனைத்தும் தாமதமாக முடியும். உங்கள் தனிப்பட்ட ரகசியங்களை தனி நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சாலையில் பயணிக்கும் போது கவனமாகச் செல்லுங்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் மந்தமான நிலை உருவாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
துலாம்
துலாம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக அமையும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மகிழ்ச்சி பொங்கும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில், உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.
தனுசு
தனுசு: பிள்ளைகளின் தனித்திறமையைக் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்வீர்கள். வருங்காலத் திட்டத்தில் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புக்கள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.
மகரம்
மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை செய்வீர்கள். வீடு, வாகனப்பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு தடைகளை சந்திப்பீர்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
கும்பம்
கும்பம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. பயணங்களால் நன்மை கிடைக்கும். மற்றவர்களின் தவறை சுட்டிக்காட்டுவதன் மூலம், சச்சரவுகளில் சிக்குவீர்கள். திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தலைமை உங்களுக்குச் சாதகமாக இருப்பார் முயற்சியால் முன்னேறும் நாள்.
மீனம்
மீனம்: இதுவரையில் குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். உறவினர் கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளை சுமூகமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். உற்சாகமான நாள்.