Thursday 28th of March 2024 07:10:16 PM GMT

LANGUAGE - TAMIL
உலகின் சக்திவாய்ந்த பெண்ணாக ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்!

உலகின் சக்திவாய்ந்த பெண்ணாக ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்!


'போர்ப்ஸ் பத்திரிகை' வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடத்தை பிடித்து உள்ளார்.

ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தவர்களின் குடியுரிமைக்காக குரல் எழுப்பி வரும் மெர்க்கல் தொடர்ந்து 9-ஆவது முறையாக முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

அவரை தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்டே 2-ஆவது இடத்தையும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி 3-ஆவது இடத்தையும் பிடித்து உள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல 'போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

100 பேர் கொண்ட இந்த பட்டியலில் இடம்பெறுவது மிகப்பெரும் கௌரவமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பத்திரிகை 2019ஆம் ஆண்டுக்கான சக்தி வாய்ந்த பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவின் நிர்மலா சீதாராமன் இந்த பட்டியலில் 34-வது இடத்தை பிடித்து உள்ளார். இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சரும் முதல் பெண் இராணுவ அமைச்சருமான நிர்மலா சீதாராமன் முதல்-முறையாக இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளார்.

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக சர்வதேச தலைவர்களை கண்டித்து உலக அளவில் கவனம் ஈர்த்த சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், 16 வயது சிறுமியுமான கிரேட்டா தன்பெர்க் இந்த பட்டியலில் 100ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற பெண்கள்.

1. ஏஞ்சலா மேர்க்கெல் - ஜேர்மனி பிரதமர்

2. கிறிஸ்டின் லகார்ட் - பிரான்ஸ் (தலைவர் - ஐரோப்பிய மத்திய வங்கி)

3. நான்சி பெலோசி - சபாநாயகர் - அமெரிக்கா பிரதிநிதிகள் சபை

4. உர்சுலா வான் டெர் லேயன் - பெல்ஜியம் (தலைவர் - ஐரோப்பிய ஒன்றியம்)

5. மேரி பார்ரா – அமெரிக்கா (தலைமை நிர்வாக அதிகாரி - அமெரிக்கா ஜெனரல் மோட்டார்ஸ்)

6. மெலிண்டா கேட்ஸ், - அமெரிக்கா (இணைத் தலைவர், பில் ரூ மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை)

7. அபிகெய்ல் ஜான்சன் - அமெரிக்கா (தலைமை நிர்வாக அதிகாரி, ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்)

8. அனா பாட்ரிசியா போடன் - ஸ்பெயின் (நிர்வாகத் தலைவர் - சாண்டாண்டர்)

9. ஜின்னி ரோமெட்டி - அமெரிக்கா (தலைமை நிர்வாக அதிகாரி, ஐ.பி.எம்)

10. மேர்லின் ஹெவ்ஸன் - அமெரிக்கா (தலைமை நிர்வாக அதிகாரி, லாக்ஹீட் மார்டின்)

IMAGE_ALT


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE